வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

புதுவரவான காமெடி வில்லனாக கலக்கும் மங்களம் சீனு.. ஜெயிலர் பட ப்ளாஸ்ட் மோகனுக்கு வரிசையில் நிற்கும் 4 படங்கள்

New Vilnian: தற்போது வெளிவரும் படங்களில் அனைத்து விதமான நடிகர்களும் மாத்தி மாத்தி நடித்துக் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தெலுங்கு நடிகர்கள் தமிழில் நடிப்பதும், தமிழ் நடிகர்கள் தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் கலக்குவதும் வழக்கமாகி வருகிறது. இதற்கெல்லாம் ஒரு காரணம் ஆங்காங்கே ஒரு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் அந்த படம் அனைவராலும் பார்க்கப்பட்டு வரவேற்பு பெரும் என்பதற்காகத் தான்.

அந்த வகையில் சமீபத்தில் ட்ரெண்டிங்கில் வரும் தெலுங்கு நடிகர் ஒருவர் அனைவரது கவனத்தையும் திருப்பி விட்டார். 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுனா நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் சுனில் என்பவர் மங்கலம் சீனு என்ற கேரக்டரில் அனைவரையும் மிரள வைத்திருப்பார்.

Also read: நம்ம நடிகர்களை ஓரம் கட்ட வரும் 5 அக்கட தேசத்து ஹீரோக்கள்.. ரசிகர்களைக் கவர்ந்த அல்லு அர்ஜுன்

இதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக தமிழிலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அந்த வகையில் மாவீரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவருடைய நடிப்பை கொடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். அத்துடன் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படத்திலும் ப்ளாஸ்ட் மோகனாக நடித்துள்ளார்.

இப்படி இவர் நடித்த இரண்டு படங்களின் மூலம் சரியான அங்கீகாரம் கிடைத்ததை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழில் நான்கு படங்களில் நடிப்பதற்கு கமிட்டாய் இருக்கிறார். கண்டிப்பாக இவருடைய திறமைக்கு ஆல் ரவுண்டு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஏற்கனவே தமிழ் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

Also read: தூக்கிட்டு வாங்க அந்த செல்லத்தை.. ஜெயிலரில் வாய்ப்பு வாங்கிய மாவீரன் பட நடிகர்

இதன் மூலம் இவர் நடிக்க இருக்கும் நான்கு படங்களை பற்றி பார்க்கலாம். விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார். மேலும் இவர்களுடன் எஸ் ஜே சூர்யா, ரிது வர்மா, செல்வராகவன், அபிநயா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாய் இருக்கிறார். அடுத்ததாக ஈகை மற்றும் புல்லட் போன்ற படங்களிலும் நடிக்க இருக்கிறார். அதுபோக புஷ்பா 2 படத்திலும் தொடர்ந்து கலக்கி வருகிறார்.  தற்போது புது வில்லனாக அவதாரம் எடுத்து நடித்து வருகிறார்.

Also read: தேடிவந்த வாய்ப்பை தவறவிட்ட அரவிந்த்சாமி.. ஸ்கோர் செய்து புலம்ப வைத்த எஸ் ஜே சூர்யா

Trending News