புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரஜினிக்கு பெருத்த அவமானத்தை கொடுத்த மணிரத்தினம்.. கமலுக்கு கிடைத்த கௌரவம்

மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் மிகப் பிரம்மாண்ட முறையில் வரலாற்று திரைப்படமாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளிவந்தது. இந்தப் படம் எதிர்பார்த்த அளவைவிட மக்களிடத்தில் அதிக அளவில் ரீச் ஆகி வணிக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. முதலில் இந்த படத்தை ரிலீஸ் ஆவதற்கு முன்னர் இந்த படத்தை பற்றி எந்தவித முழுமையான கருத்தும் மக்களிடத்தில் இல்லாமல் இருந்தது.

அதற்காக முதல் பாகத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷனில் ரஜினி இதை கௌரவிக்கும் விதமாக அவரை கூப்பிட்டார்கள். அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த படத்தைப் பற்றி எளிய முறையில் மக்களுக்கு எடுத்துரைத்தார். ஏனென்றால் இது ஒரு சரித்திர படம் என்பதால் அவ்வளவு ஈசியாக மக்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை.

Also read: பொன்னியின் செல்வன் படத்திற்காக தீவிர வாள் பயிற்சியில் ஈடுபட்டுள்ள விக்ரம்.. வைரலாகும் வீடியோ

அந்த வகையில் இவர் சொன்ன விதம் மக்களிடத்தில் ஈஸியான முறையில் ரீச் ஆகி பெரிய வரவேற்பை கொடுத்ததற்கு இவர் முக்கிய காரணம் என்றே சொல்லலாம். இதனை அடுத்து இதன் இரண்டாம் பாகம் அதே மாதிரி பிரம்மாண்ட முறையில் உருவாக்கி ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதற்காக ஆடியோ லான்ச் பங்க்ஷன் கோலாகலமாக நாளை நடைபெற இருக்கிறது.

முதல் பாகத்தை பார்த்த மக்கள் இதனுடைய இரண்டாம் பாகத்திற்கு அதிக அளவில் எதிர்பார்த்து வருகிறார்கள். ஏற்கனவே சமீபத்தில் வெளிவந்த பாடலால் இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதனை அடுத்து நாளை நடைபெற இருக்கும் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு ரஜினியை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்து நிலையில் அவரை ஒதுக்கும் விதமாக இந்த நிகழ்ச்சிக்கு கூப்பிடவில்லை. இது ரஜினிக்கு ஏற்பட்ட பெரிய அவமானமாக இருக்கிறது.

Also read: மணிரத்தினத்திற்கு போட்டியாக களம் இறங்கும் சௌந்தா்யா ரஜினிகாந்த்.. மாஸாக வெளிவந்த அப்டேட்.!

இது எந்த விதத்தில் சரியாகும் என்று தெரியவில்லை. ஏனென்றால் ரஜினி தான் முதல் பாகத்தை மக்களிடையே கொண்டு சேர்த்தார். அதன் பின் தான் மொத்த தமிழகமும் இந்த படத்தை உற்று நோக்கியது. அப்படி இருக்கையில் இப்பொழுது இதன் இரண்டாம் பாகத்திற்கு சீப் கெஸ்ட் ஆக உலக நாயகன் கமலை அழைத்திருக்கிறார்கள்.

இப்பொழுது கமல் தான் சீப் கெஸ்ட் ஆக வர இருக்கிறார். ரஜினியை இந்த மாதிரி ஒதுக்கியது மணிரத்தினம் தான். இவர் ஏன் இந்த மாதிரி செய்ய வேண்டும் ரஜினி செய்த உதவியை இவ்வளோ ஈசியாக மறந்து விட்டு நாளை இதற்கான நிகழ்ச்சியை நடத்துகிறார் என்று சினிமா வட்டாரத்தில் பலரும் அவர்கள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Also read: பிரம்மாண்டமாக நடக்கும் பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா.. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

Trending News