சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ரக்குடு பாய் இமேஜ் வரமாட்டேங்குதேன்னு அழும் ஹீரோ.. மணிரத்தினமும் சாக்லேட் பாயாய் காட்டிய வேதனை

தற்போது இருக்கும் காலத்தில் யாராவது கொழு கொழுவென்று மூஞ்சியை அப்பாவியாக வைத்துக் கொண்டால் அவர்களை சாக்லேட் பாயாகவும் சரியான பழம் என்று சொல்லும் விதமாக அவர்களுக்கு ஈசியாக பெயர் வைத்து விடுவார்கள்.

இதற்குப் பின் இதை நினைத்து வருந்தக்கூடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படித்தான் சினிமாவிலும் ஆரம்பத்தில் இருந்தே இந்த ஹீரோவுக்கு சாக்லேட் பாய் என்று முத்திரையை குத்தி விட்டனர். அவரும் அதிலிருந்து மீண்டு எப்படியாவது ஆக்சன் ஹீரோவாக வர வேண்டும் என்று பல படங்களில் முயற்சி செய்து வருகிறார்.

Also read: நாய்க்குட்டி மாதிரி சொன்னதை செய்த ஹீரோ.. கூப்பிட்டு அசிங்கப்படுத்திய மணிரத்தினம்

ஆனால் அப்படி ஆக்ஷன் படங்களில் நடித்தும் அவருக்கு அது மிகப்பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் அவருக்கு அதற்கேற்ற மாதிரி மேக்கப் போட்டால் கூட சாக்லேட் பாய் லுக்கு மட்டும் தான் வருகிறது. இதை நினைத்து அவர் பல நாட்களாக வருத்தப்பட்டு இருக்கிறார்.

ஏனென்றால் அவருக்கு சாக்லேட் பாயாக இருப்பதைவிட ரக்குடுபாயாக இருக்க வேண்டும் என்று அந்த இமேஜ்காக போராடி வருகிறார். சமீபத்தில் கூட இயக்குனர் முத்தையாவிடம் கிராமத்துக் கதையுடன் கூடிய கதாபாத்திரத்தில் எனக்கு தாடி மற்றும் முறுக்கு மீசை வைத்து ஒரு படம் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

Also read: வசூல் சாதனையில் முதல் 5 இடத்தை பிடித்த படங்கள்.. பல வருட ரெக்கார்டை முறியடித்த மணிரத்தினம்

ஏனென்றால் இயக்குனர் முத்தையா அதற்கு மிகவும் பெயர் பெற்றவர். அதனால் அவரிடம் அந்த ஹீரோ தஞ்சம் அடைந்து வருகிறார். அப்படி ரக்குடு பாய் இமேஜுக்கு தவித்து வரும் ஹீரோ யார் என்றால் நம்முடைய ஃபேவரிட் ஆன ஜெயம் ரவி தான். இவரை வைத்து சமீபத்தில் மணிரத்தினம் கூட பொன்னியின் செல்வன் படத்தில் சாக்லேட் பாய் போலத்தான் காட்டியிருப்பார்.

அதனால் என்னதான் ரக்குடுபாயாக மாற முடியவில்லை என்றாலும் அட்லீஸ்ட் அந்தத் தோற்றத்தில் யாவது நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டு வருகிறார். ஆனால் சில விஷயங்களை மாற்றவே முடியாது என்று இவருக்கு தெரியவில்லை. இவருடைய இமேஜ் மட்டும் இல்ல கேரக்டர் கூட அப்படித்தான் இருப்பதால் யாராலையும் ஒன்னும் பண்ண முடியவில்லை.

Also read: பொன்னியின் செல்வனுக்குப் பிறகு ஜெயம் ரவிக்கு இப்படி ஒரு மாற்றமா? ஆச்சரியத்தில் உறைந்த அருள்மொழி வர்மன்

Trending News