தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் ஆரம்ப காலத்தில் பல இசையமைப்பாளருடன் பணியாற்றி இருப்பார்கள். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு தனது ஆஸ்தான இசையமைப்பாளர்களை வைத்து படங்களுக்கு இசையமைப்பார்கள். தற்போது வரை இவர்களது கூட்டணி பிரிக்க முடியாமலேயே இருக்கும். அப்படி தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை இணைந்து பணியாற்றி வரும் இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் பற்றி பார்ப்போம்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரோஜா. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் மூலம் தான் மணிரத்னம் ஏ ஆர் ரஹ்மானை அறிமுகம் செய்து வைத்தார் இப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தன.
இப்படத்தில் மணிரத்னம் மற்றும் ஏ ஆர் ரகுமான் இருவரும் இணைந்து பணியாற்றியது மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்பட்டதால் தற்போது வரை மணிரத்னம் ஏ ஆர் ரகுமான் வைத்து பல படங்களில் இசையமைத்து வருகிறார்.

பா ரஞ்சித் முதல் படமான அட்டகத்தி படத்தின் மூலம் தான் சந்தோஷ் நாராயணன் அறிமுகமானார். இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. அதுமட்டுமில்லாமல் இருவருக்குமிடையே நல்ல நட்பு இருப்பதால் தற்போது வரை பா ரஞ்சித் இயக்கும் அனைத்து படங்களுக்குமே சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து வருகிறார்.

இவர்களைத் தவிர ஒரு சில இயக்குனர்கள் தற்போது வரை ஒரு சில இசையமைப்பாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். ஆனால் ஏதோ ஒரு கால கட்டத்தில் இருவருக்கும் இணைந்து பணியாற்ற முடியாமல் சூழல் ஏற்பட மற்ற இசையமைப்பாளர்கள் உடலும் ஒரு சில இயக்குனர்கள் பணியாற்றி உள்ளனர்.