எப்போதுமே தமிழ் சினிமாவில் உள்ள இளம் இயக்குனர்கள் முதல் மூத்த இயக்குனர்கள் வரை மரியாதை வைத்திருக்கும் இயக்குனர் என்றால் அது மணிரத்னம் தான். அந்தந்த காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் படமெடுத்த இன்னமும் தமிழ்சினிமாவில் முன்னணி இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
மணிரத்னம் படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் நல்ல நல்ல படங்களை தயாரிக்கவும் விரும்புகிறார். அந்த வகையில் சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஒன்றிற்காக நவரசா என்ற ஆந்தாலஜி படத்தை எடுத்து வெளியிட்டார். ஆனால் நவரசா என்ற பெயரில் வெளியானது படத்தில் இடம்பெற்றுள்ளது கதைகளும் ரசிகர்களை கவரவில்லை என்பதே உண்மை.
அதில் சிரிப்பு என்ற பகுதியை இயக்குவதற்காக முதன்முதலில் சிறந்த காமெடி இயக்குநரான பொன்ராம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கௌதம் கார்த்திக் நடித்த அந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து மணிரத்னத்திடம் கொடுத்துவிட்டாராம் பொன்ராம். ஆனால் மணிரத்தினம் இந்தப் படம் தன்னை கவரவில்லை என அவரை நீக்கிவிட்டு மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் ஒப்பந்தம் செய்து யோகி பாபு வைத்து ஒரு படம் எடுத்து வெளியிட்டனர்.
இதுகுறித்து மணிரத்னத்திடம் கேட்டபோது சரியான விளக்கம் தரவில்லை எனவும் எப்படியும் தன்னுடைய படம் அதில் இடம் பெற்று விடும் என்ற நம்பிக்கையில் இருந்ததை மணிரத்னம் ஏமாற்றி விட்டதாகவும் சமீபத்தில் பொன்ராம் எம்ஜிஆர் மகன் படத்தின் விழா ஒன்று மனம் குமுறியது மணிரத்தினம் மீதான மரியாதையை குறைத்துள்ளது என்றே சொல்லலாம்.
எப்போதுமே அனைவரிடமும் அன்புடனும் நன்மை செய்யும் விதமாகவும் பழகிய மணிரத்தினம் பொன்ராம் விஷயத்தில் இப்படி செய்தது பலருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது. மணிரத்னம் போது சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் என்ற படத்தை எடுத்து வருகிறார். இரண்டு பாகமாக வெளியாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.