மணிரத்தினம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளார். ஒரு மிகப்பெரிய கல்கி நாவலை இரண்டு பாகங்களாக எடுக்க முடியுமா என்பது எல்லோரின் கேள்வியாக உள்ளது. ஏனென்றால் பொன்னியின் செல்வன் நாவலில் ஒருவரின் கதாபாத்திரத்தையே ஒரு படமாக எடுக்கலாம்.
ஏனென்றால் அந்த அளவுக்கு பொன்னியின் செல்வன் மிகப்பெரிய நாவல். ஆனால் அதை சுருக்கி சுவாரஸ்யம் குறையாமல் மணிரத்தினம் எடுத்துள்ளார். இதனால் படத்தின் நீளம் எப்படியும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. அதேபோல் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
Also Read :23 வருட சாபத்தை தும்சம் செய்யும் பொன்னியின் செல்வன்.. சாதனை படைக்கும் மணிரத்தினம்
அதாவது பொன்னியின் செல்வன் படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 47 நிமிடங்கள் ஓடும் என்பது தெரியவந்துள்ளது. சமீபகாலமாக பெரிய பட்ஜெட் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. வலிமை, கோப்ரா போன்ற படங்களின் தோல்விக்கு படத்தின் நீளம் தான் காரணம் என சொல்லப்பட்டது.
இதனால் அதிக ரன்னிங் டைம் உடைய படங்கள் தொடர்ந்து தோல்வி பெற்று வருகிறதே என்று பிரஸ்மீட்டில் மணிரத்தினம் இடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மணிரத்தினம், விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு என்று கேட்டார். அதாவது 2 மணி நேரம் 53 நிமிடங்கள் உடைய விக்ரம் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது.
Also Read :ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த மணிரத்தினம்.. பொன்னியின் செல்வனை கைப்பற்றிய நிறுவனம்
ஆண்டவரே நமக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்லி விட்டு போய் உள்ளார் என்று மணிரத்தினம் கூறியிருந்தார். லோகேஷ் கனகராஜ் போல ரசிகர்களை சோர்வடைய வைக்காமல் கதையை விறுவிறுப்பாக எடுத்துச் சென்றால் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதை மணிரத்தினம் தெளிவுபடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி கமலஹாசனும் தனது குரல் மூலம் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ளார். மேலும் படத்தின் வெற்றிக்கும், நேரத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பதை கமலின் விக்ரம் படம் நிரூபித்த நிலையில் பொன்னின் செல்வன் படமும் மாபெரும் வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.
Also Read :யாருக்கு இப்படி ஒரு குடுப்பனை கிடைக்கும்.. பொன்னியின் செல்வன் படத்தில் இவர்தான் ப்ளே பாய்!