Kamal : தக் லைஃப் சூட்டிங்க்கு 3 நாள் முழுக்கு போட்ட கமல்.. கடுப்பான மணிரத்னம், ஆண்டவர் கொடுத்த அதிர்ச்சி

கமல் இப்போது ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்த நிலையில் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. சிம்பு, த்ரிஷா போன்ற பிரபலங்களும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

மணிரத்னம் மற்றும் கமல் டெல்லியில் சங்கமித்திருக்கின்றனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகவும் பரவியது. இந்த சூழலில் டெல்லியில் மூன்று நாள் சூட்டிங்க்கு கமல் செல்லாமல் முழுக்கு போட்டிருக்கிறார்.

இதனால் படப்பிடிப்பு தாமதமாகிவிட்டது என கமல் மீது கடுப்பாகி இருக்கிறார் மணிரத்தினம். ஆனால் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் படியாக ஆண்டவர் ஒரு காரியத்தை செய்து இருக்கிறார்.

கமலால் கடுப்பான மணிரத்னம்

அதாவது தக் லைஃப் படத்தில் ஒரு பாடலை எழுதி பாடியிருக்கிறார். அந்த மூணு நாள் சூட்டிங்க்கு வராத காரணம் கமல் அந்தப் பாடல் வரிகளை எழுதி முடிக்க தான் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் மீண்டும் கமல் தக் லைஃப் படப்பிடிப்புக்கு வந்தபோது பாடல் வரியை மணிரத்னம் இடம் கொடுத்து சர்ப்ரைஸ் செய்து விட்டாராம். மூன்றே நாட்களில் மொத்த பாடலையும் எழுதி உள்ளதால் மணிரத்னமும் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்.

மேலும் தக் லைஃப் படத்தில் அந்த பாடல் கண்டிப்பாக பெரிய ஹிட்டாகும் என மணிரத்னம் கூறியிருக்கிறாராம். இதைத்தொடர்ந்து இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரும் இப்போது படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளனர்.

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்