வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நிற்க கூட நேரம் இல்லாமல் பறக்கும் உலக நாயகன்.. அடுத்த கட்ட சம்பவத்திற்கு தயாராகும் மணிரத்தினம்

Actor Kamal: விக்ரம் படம் வெற்றிக்குப் பிறகு கமல் தன் அடுத்த கட்ட படங்களில் பிசியாக இருந்து வருகிறார். இருப்பினும் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில், மணிரத்தினம் இயக்கத்திலும் கமல் நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தின் தகவலை கொஞ்சம் கூட லீக் செய்யாது சஸ்பென்சை உருவாக்கி வருகின்றனர்.

1987ல் மணிரத்தினம் இயக்கத்தில் மாபெரும் வெற்றி கண்ட படம் தான் நாயகன். இவர் கமலை வைத்து மேற்கொண்ட முயற்சி நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் எந்த ஒரு படமும் வெளிவராத நிலையில் தற்போது 36 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி பெருத்த எதிர்பார்ப்பை முன்வைத்து வருகிறது.

Also Read: காதலனை உறுதிப்படுத்திய தமன்னா.. படுமோசமாக இறங்கிய மில்க் பியூட்டி

அவ்வாறு பார்க்கையில் இந்தியன் 2 வில் பிஸியாக இருக்கும் கமல் அப்படத்தை முடித்த பின்னரே மணிரத்தினம் இயக்கத்தில் மேற்கொள்ள இருக்கிறார். எப்பொழுது படப்பிடிப்பை துவங்குவார் என்ற எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராது இருந்து வருகிறது. ஆனால் அப்படம் ஒரு சமூக அநீதியை எடுத்துரைக்கும் படமாக தான் இருக்கும் என்ற அறிவிப்பை முன்வைத்துள்ளனர்.

இதற்கிடையே துணிவு பட வெற்றியை தொடர்ந்து கமலின் நடிப்பில் படம் மேற்கொள்வதாக ஹெச் வினோத் அறிவித்த நிலையில், இவரும் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிவுக்கு தான் காத்திருக்கிறார். இதை குறித்த பேச்சு வார்த்தையை மேற்கொள்ள கமலும், ஹெச் வினோத்தும் சேர்ந்து பல இடங்களில் ஒன்றாக சுற்றி வருகின்றனர்.

Also Read: போர் தொழில் படத்தில் மிஸ்ஸான 5 மட்டமான லாஜிக்.. காசு வராததால் கழுவி ஊற்றிய பயில்வான்

ஆனால் இவருக்கு கமல் வெறும் 35 நாட்களே கால் சீட் கொடுத்துள்ளதாக கூறும் இவர் அதற்குரிய வேலைகளை தொடங்க உள்ளாராம். மேலும் இப்படத்தை முடித்துவிட்டு, பின்னர் தான் மணிரத்தினத்துடன் இணைகிறார் கமல்.

இப்படம் தொடங்க நாட்கள் அதிகமாக இருப்பின், கொடைக்கானலில் உள்ள வீட்டிற்கு மணிரத்தினம்,இது குறித்த பேச்சு வார்த்தையை மேற்கொள்ள கமலை அழைத்திருக்கிறார். தற்பொழுது மாமனாரும், மருமகனும் இப்படத்திற்கான டிஸ்கஷனை மேற்கொண்டு வருகிறார்களாம்.

Also Read: ஒட்டுமொத்த பழியையும் மூர்த்தி மேல் போடும் விஷப்பூச்சி.. எமோஷனலாக உடைந்து போகும் கதிர்

Trending News