இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனரான மணிரத்னம் படத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க மறுத்ததால் அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் அந்த நடிகையின் பெற்றோரை ஒரு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக அந்த நடிகை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பெரிய அளவில் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் ராணி முகர்ஜி. இவர் கமலஹாசனுடன் ஹே ராம் என்ற படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தார். இவர் பாலிவுட் சினிமாவில் நம்பர் ஒன் நடிகை என்பது தெரிந்த விஷயம் தான்.
இவர் எப்படி மணிரத்தினம் படத்தில் என யோசிக்க வேண்டாம். மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் மற்றும் ஷாலினி நடிப்பில் வெளியாகி தமிழகத்தில் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்ற திரைப்படம் அலைபாயுதே. இந்த படத்திற்கு பிறகு மணிரத்தினம் இதே படத்தை ஹிந்தியில் வைத்து இயக்க ஆசைப்பட்டார். அங்கு மாதவன் கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் மற்றும் ராணி முகர்ஜி ஆகியோரும் நடித்தனர்.
இந்த படத்தில் முதலில் மணிரத்னம் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவரும் ராணி முகர்ஜியை சந்தித்து இப்படி ஒரு கதை இருக்கிறது இவர்தான் படம் செய்யப் போகிறார் என கூறியுள்ளார். ஆனால் ராணி முகர்ஜிக்கு இந்த படத்தில் நடிக்க கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம். ஆனால் ராணிமுகர்ஜி நடித்தால் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்பது தயாரிப்பாளரின் நம்பிக்கை.
கொஞ்ச நாட்கள் பொறுமையாக சொல்லி பார்த்த தயாரிப்பாளரிடம் பிடிகொடுக்காத ராணி முகர்ஜியை மிரட்டி அந்த படத்தில் நடிக்க வைப்பதற்காக அவரது பெற்றோர்களை ஒரு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தாராம் தயாரிப்பாளர். இதை ராணி முகர்ஜியே சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓப்பனாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் இந்த மாதிரி நடப்பது ஒன்றும் முதல் முறை கிடையாது. ஆனால் பலரும் இதை பற்றி வெளிப்படையாக தெரிவிக்க முன்வருவதில்லை. இவ்வளவு ஏன் ராணி முகர்ஜி கூட இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலான நிலையில் தான் வெளியில் சொல்லி உள்ளார். சினிமாவில் இப்படி வெளியில் சொல்ல முடியாத கதைகள் இன்னும் எவ்வளவு இருக்கிறதோ.