திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மணிரத்தினத்தின் கழுத்தை நெறிக்கும் பொன்னியின் செல்வன் ரிலீஸ்.. சுயநல வாதியாக மாறிய நடிகர்கள்

மணிரத்தினம் இத்தனை வருடங்களாக போராடி வந்த பொன்னியின் செல்வன் கதையை மையமாக வைத்து பொன்னியின் செல்வன் எனும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார். ஆனால் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் கொடுத்து வருகின்றனர்.

தெலுங்கு போன்ற மற்ற திரையுலகில் படம் வெற்றி, தோல்வி அடுத்தது அந்த இண்டஸ்ட்ரியோட பெரிய படம் வந்தா ஒற்றுமையாஇருக்கிறார்கள். RRR படம் வந்தப்ப மற்ற கதாநாயகர்களின் படங்களை தள்ளி போட வச்சு எத்தனை முறை தேதி மாத்துனாங்க.

Also read: நாலா பக்க வசூலுக்கு பலே திட்டம் போட்ட மணிரத்தினம்.. பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபலம்

ஏன்னா அந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் அதனால் எந்தவித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக மற்ற கதாநாயகர்களின் படங்கள் தேதியில் தள்ளி வைக்கப்பட்டது. அந்த அளவிற்கு ஒரு பெரிய பிரம்மாண்ட படம் வெற்றி செய்ய பலரும் உறுதுணையாக இருந்துள்ளனர்.

இங்க இந்த இண்டஸ்ட்ரி 40-50 வருஷமா எடுக்கணும்னு முயற்சி பண்ண பொன்னியின் செல்வன் படத்துக்கு இந்த கதி அதுவும் பொன்னியின் செல்வன் படத்துடன் நானே வருவேன் படத்தையும் ஒன்றாக வெளியிடுகின்றனர். மத்த இண்டஸ்ட்ரி படங்கள் வெற்றி பெறுவதற்கு காரணம் அவர்களுக்கு இருக்கும் ஒற்றுமை

Also read: பொன்னியின் செல்வனில் மிரட்டும் 10 கதாபாத்திரங்கள்.. ஒவ்வொருத்தராய் பார்த்து செதுக்கிய மணிரத்தினம்

ஆனால் இங்கு ஒவ்வொரு தனித்துவமான நடிகர்களும் தங்களுடைய படம் தான் வெற்றி பெற வேண்டும் என சுயநலவாதியாக இருக்கின்றனர். சாதாரண படங்கள் போட்டி போடுவது சகஜம் ஆனால் சரித்திர படங்கள் வெளிவரும்போது அவர்களுக்கென தனி வழிவிடுவது பெருந்தன்மை என பலரும் கூறி வருகின்றனர்.

மேலும் நானே வருவேன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கொஞ்சம்கூட பெருந்தன்மை இல்லாமல் சுயநலவாதியாக இருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ஒரு படம் வெளியாகும் போது தன்னுடைய படம் வெளியிட்டாலும் வசூல் பெரும் என நினைப்பது சரியாக இருந்தாலும் ஒரு பிரமாண்ட படத்தின் விழி வரும்போது அந்த படத்தின் வசூலில் எந்தவித இடையூறும் இல்லாமல் இருப்பதுதான் பெருந்தன்மை என பலரும் கூறி வருகின்றனர்.

Also read: வருகிறான் சோழன்.. பொன்னியின் செல்வன் ரிலீஸ்க்கு நாள் குறித்த மணிரத்தினம்

Trending News