திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தக் லைஃப் துல்கர் போனதும் அந்த 2 மலையாள நடிகருக்கு போட்ட ஸ்கெட்ச்.. எதற்கும் அசராத மணிரத்தினம்

Manirathinam In Thug Life: எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கமுக்கமாக படத்தை இயக்குவதில் மணிரத்தினத்தை மிஞ்சும் அளவிற்கு யாரும் இல்லை. ஆனால் எடுக்கக்கூடிய படம் தான் சைலன்டாக இருக்குமே தவிர, படம் வெளிவந்தால் தாறுமாறாக பட்டையை கிளப்பி விடும். இயக்கக்கூடிய படங்களில் வெற்றியை பார்க்காமல் ஓயவே மாட்டார்.

அப்படிப்பட்டவர் தற்போது கமலை நாயகனாக வைத்து தக் லைப் படத்தை எடுத்து வருகிறார். இதில் சிம்பு, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா, கௌதம் கார்த்திக், நாசர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில் இப்பொழுது டெல்லியில் இருக்கும் செங்கோட்டை பகுதியில் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் இப்படத்தில் இருந்து துல்கர் மற்றும் ஜெயம் ரவி விலகி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்கள் மறுபடியும் இவர்கள் இதில் நடிக்கிறது உறுதியாகிவிட்டது. முக்கியமாக துல்கர் இப்படத்தில் இருந்து விலகியதற்கான காரணம் தக் லைஃப் படத்தின் திட்டமிடுதல் சரியாக இல்லாததால் விலகி விட்டதாக கூறப்பட்டது.

மணிரத்தினிடம் சரணடைந்த துல்கர்

அந்த சூழ்நிலையில் கூட அசராத மணிரத்தினம், துல்கர் இல்லன்னா என்ன ரசிகர்களின் ஃபேவரிட் நடிகர்கள் என்று இரண்டு பேர் இருக்கிறார்கள் என டோமினோ தாமஸ் மற்றும் நிவின் பாலி-யை நடிக்க வைப்பதற்கு பேசியிருக்கிறார். ஒன்று இல்லன்னா இன்னொன்னு என்று யோசித்து அடுத்தடுத்து பயணிக்க கூடியவர் தான் மணிரத்தினம்.

அப்படிப்பட்டவரிடம் துல்கர் கொஞ்சம் வேலையை காட்டியதால் சட்டென்று முடிவை எடுத்து விட்டார் மணிரத்தினம். அதன்பின் துல்கர் வேற வாய்ப்பு சரியாக இல்லாததால் வேறு வழி இல்லாமல் மணிரத்தினத்திடமே சரண் அடைந்து விட்டார். அந்த வகையில் இப்பொழுது பிளான் பண்ணியபடி தக் லைஃப் படப்பிடிப்பு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது.

Trending News