சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் பலருக்கும் சரித்திர கதைகள், நாவல் போன்ற படைப்புகளின் மேல் நிச்சயம் ஆர்வம் இருக்கும். அவர்கள் அந்த கதையை திரைப்படமாக எடுக்கவும் விரும்புவார்கள். அந்த வகையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்தினம் பிரம்மாண்ட திரைப்படமாக இயக்கிய வெற்றி பெற்றிருந்தார்.
அதைத்தொடர்ந்து அவர் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கைதிகள் என்ற படைப்பை திரைப்படமாக உருவாக்க ஆசைப்பட்டார். ஆனால் இந்த கதையை அவரிடம் கொடுப்பதற்கு ஜெயமோகன் மறுத்துவிட்டார். ஏனென்றால் ஏற்கனவே இந்த கதையை அவர் ரபிக் என்ற இயக்குனருக்கு கொடுக்க சம்மதித்திருக்கிறார்.
Also read: சூர்யாவை தூக்கிவிட்டு பாலா எடுக்கப்போகும் வணங்கான்.. அடுத்த ஹீரோ யார் தெரியுமா?
மணிரத்னத்தை தொடர்ந்து வெற்றிமாறன், பாலா ஆகியோர்களும் இந்த கதைக்காக ஜெயமோகனை அணுகி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் தோல்விதான் கிடைத்திருக்கிறது. இப்படி இந்த மூன்று முன்னணி இயக்குனர்களும் இந்த கதைக்கு போட்டி போட்டதற்கு பின்னால் ஒரு வலுவான காரணமும் இருக்கிறது.
ஏனென்றால் மனிதாபிமானம் ஒருவரை எவ்வாறு பாதிக்கிறது, ஆயுதப்படையில் இருப்பவர்களுக்கு அந்த மனிதாபிமானம் இருக்கிறதா என்பதை தான் இந்த கதை காட்டுகிறது. அதனாலேயே மணிரத்தினம் இந்த கதையை ஒரு லட்சியத்திற்காகவே திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.
ஆனால் அவரின் துரதிஷ்டம் இந்த கதை வேறு ஒருவருக்கு சென்று விட்டது. தற்போது இந்த கதை ரத்த சாட்சி என்னும் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. அனிதா மகேந்திரன் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் குமார், கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பே ரசிகர்களை கவர்ந்த நிலையில் இப்படம் நேரடியாக ஆஹா தமிழ் ஓ டி டி தளத்தில் வெளியாக இருக்கிறது. டாப் இயக்குனர்களின் சாய்ஸாக இருந்த இந்த திரைப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்று பட குழு தெரிவித்துள்ளது. மேலும் வெற்றிமாறன் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் விடுதலை திரைப்படம் கூட ஜெயமோகனின் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Also read: மீண்டும் வரலாற்று படத்தில் நடிக்கப் போகும் விக்ரம்.. இந்த தடவை ஆதித்ய கரிகாலன் கிடையாது