வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வெற்றிமாறனின் சக்சஸ் படத்தை எடுக்க ஆசைப்பட்ட மணிரத்னம்.. விஷயம் தெரிந்து முந்தி கொண்ட சாமர்த்தியம்

வெற்றிமாறனின் படத்தில் ஒரு தடவையாவது நடித்துவிட வேண்டும் என இளம் நடிகர்கள் முதல் டாப் நடிகர்கள் வரை ஆசைப்படுகின்றனர். அந்த அளவிற்கு தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வரிசையாக வெற்றிகளை கொடுத்து கொண்டு இருக்கிறார். அதிலும் வெற்றிமாறனுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படத்தினை மணிரத்தினம் தான் முதலில் எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார்.

ஆனால் எப்படியோ வெற்றிமாறன் சாமர்த்தியமாக முந்தி கொண்டார். எம்ஜிஆர் முதல் பல பிரபலங்கள் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என கனவு கண்டனர். ஆனால் அந்த கனவை நினைவாக்கியவர் மணிரத்தினம் தான். கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தையும் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் பாகத்தையும் ரிலீஸ் செய்து தன்னுடைய திரை கனவை நிறைவேற்றிக் கொண்டார் மணிரத்தினம்.

Also Read: சினிமாவை கைவிடும் தளபதி விஜய்.. துணிச்சலான முடிவால், அதிரும் திரையுலகம்

ஆனால் பொன்னியின் செல்வனுக்கு முன்பே முக்கியமான நாவலை படமாக்க மணிரத்தினம் முயற்சி செய்தார். அது பூமணி எழுதிய வெக்கை என்ற புதினம் தான். இந்த நாவலை 3 திரைக்கதைகளாக எழுதி வைத்திருந்தார் மணிரத்தினம். இதே நாவலை வெற்றிமாறனும் அசுரன் என்ற தலைப்பில் படத்தை உருவாக்கினார். இந்த படத்தை ஆரம்பிக்கும் பொழுது மணிரத்தினத்தை வெற்றிமாறன் சந்தித்தார்.

எதேர்ச்சியாக இதைப் பற்றி சொல்லும் பொழுது மணிரத்தினம் அதிர்ந்து போய்விட்டார். பின்னர் வெற்றிமாறன் மணிரத்தினத்திடம் உங்கள் திரைக்கதைகளை நான் படிக்கலாமா? என்று கேட்டதற்கு, ‘வேண்டாம். இதை படித்தால் நீ குழம்பி விடுவாய். உன் ஸ்டைலில் நீ அந்த படத்தை உருவாக்கு அதை பார்த்த பிறகு, இந்த திரை கதையை நீ படித்துக் கொள்’ என சொல்லி இருக்கிறார்.

Also Read: எல்லா படங்களிலும் வெற்றிமாறன் கைவிடாது தூக்கி பிடித்த நடிகர்.. இன்று வரை பெயரை காப்பாற்றி கொள்ளும் ஜாம்பவான்

அதன்பின் படம் வெளிவந்து வெற்றி பெற்றது. படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பின் அந்த ஆசையை மணிரத்தினம் விட்டுவிட்டார். ஒருவேளை இந்த படத்தை மணிரத்தினம் எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என ரசிகர்கள் பேசி வருகிறார்கள். மேலும் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்திலேயே ஏகப்பட்ட விஷயத்தை நாவலில் இருந்து மாற்றிவிட்டார்.

இதனால் புத்தகம் படித்த பலருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் பேரதிர்ச்சியாக இருந்தது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்த்த அளவு வசூலும் கிடைக்காமல் போனது. இதை மனதில் வைத்துக் கொண்டு சிலர் மணிரத்தினம் இயக்கியதை விட வெற்றிமாறன் இயக்கியதே மேல். ஏனென்றால் அவர் இஷ்டத்திற்கு புத்தகத்தின் கதையை மாற்றி எழுதி விடுவார் என்று இந்த விஷயத்தை தெரிந்த பலரும் காட்டமாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

Also Read: விஜய், அஜித்துக்கு இணையாக சாதனை படைத்த சூரி.. காணாமல் போன சிம்பு!

Trending News