திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லைக்காவால் மன வேதனையிலிருக்கும் மணிரத்தினம்.. நைட் பார்ட்டியில் நடந்த கசமுசா வேலை

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து பல கோடி வசூல் சாதனை செய்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தனர். ரசிகர்களின் அமோக ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும் இந்த திரைப்படத்தின் சக்சஸ் பார்ட்டி சமீபத்தில் நடந்தது.

அந்த விழாவில் படக்குழு உட்பட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்த இந்த நிகழ்வு இரவு முழுவதும் பாட்டு, கும்மாளம் என்று பார்ட்டி களை கட்டியது. விடிய விடிய நடந்த இந்த பார்ட்டியில் நடிகர், நடிகைகள் என பலரும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். ஆனால் அந்த நைட்பார்ட்டியில் எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

Also read : பொன்னியின் செல்வனால் அடித்த ஜாக்பாட்.. அடுத்தடுத்து பிசியாகும் மணிரத்தினம்

அதாவது அந்த பார்ட்டியில் லைக்கா நிறுவனத்தை சேர்ந்தவர்கள், மணிரத்தினம் மற்றும் பொன்னியின் செல்வன் டீமை சேர்ந்தவர்கள் என அனைவரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் லைக்கா நிறுவனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மணிரத்தினத்தின் பெண் உதவியாளர் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

இதனால் சற்று நேரம் அங்கு கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது. மிகப்பெரிய பிரச்சனையாக மாறிய இந்த சம்பவத்தை அடுத்து சம்பந்தப்பட்ட அந்த நபரை அங்கு இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அடித்து விரட்டி இருக்கின்றனர். அப்போது அங்கு பெரிய சண்டை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த பிரச்சினையை சமாளிக்க யாரும் முன் வரவில்லை.

Also read : மீண்டும் ஒரே திரையில் கமல், ரஜினியை பார்க்க ஆசைப்பட்ட மணிரத்தினம்.. கடைசியில் அந்தர் பல்ட்டி அடித்த ஹீரோ

மேலும் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரண் கூட வந்து என்ன ஏதென்று கேட்கவில்லையாம். அது மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்தின் சிஇஓ தமிழ் குமரனும் அந்த இடத்திற்கு வரவில்லை. ஏனென்றால் இதில் தலையிட்டால் நம் நிறுவனத்திற்கு தான் அசிங்கம் என்று அவர்கள் அமைதியாக இருந்திருக்கின்றனர்.

ஆனால் இந்த விஷயம் மணிரத்தினத்தை ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறது. தன்னை நம்பி வந்த பெண் உதவியாளருக்கு இப்படி ஒரு அசம்பாவிதம் நேர்ந்து விட்டதை நினைத்து அவர் மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார் இதனால் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரனுக்கும் மணிரத்னத்திற்கும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது நைட் பார்ட்டியில் நடந்த இந்த கசமுசா பற்றி தான் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also read : அள்ள அள்ள குறையாத வசூல்.. லைக்காவை கெட்டியாக பிடித்துக் கொண்ட மணிரத்தினம்

Trending News