திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

500 கோடியை வைத்து 1000 கோடிக்கு பிளான் போட்ட மணிரத்தினம்.. மொத்தமாக சொதப்பி விழுந்த தரமான அடி

Director Manirathnam: சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது போல மாஸ்டர் பிளான் போட்டு லாபம் பார்க்க நினைத்த மணிரத்தினத்திற்கு இப்போது சரியான அடி விழுந்திருக்கிறது. அந்த வகையில் நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு என்ற ரீதியில் இந்தப் பிளான் மொத்தமாக சொதப்பியதால் அவர் நொந்து போய் இருக்கிறாராம்.

அதாவது கல்கியின் படைப்பான பொன்னியின் செல்வனை திரை வடிவமாக கொடுப்பதற்கு பலர் முயற்சித்த நிலையில் மணிரத்தினம் அதை சாத்தியமாக்கினார். அப்படி வெளியான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Also read: ஆடியோ உரிமத்தில் அதிக வசூல் வேட்டை ஆடிய 5 படங்கள்.. பொன்னியின் செல்வனை பின்னுக்கு தள்ளிய லியோ

அதன் காரணமாகவே இரண்டாம் பாகத்திற்கும் உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய மணிரத்தினம் தவறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இரண்டாம் பாகத்தில் கல்கி சொன்ன விஷயங்கள் அனைத்தையும் அவர் சினிமா பாணியில் தன் இஷ்டத்திற்கு மாற்றி இருந்தார்.

உண்மையில் கல்கியின் நாவலை பார்த்து ரசித்தவர்களால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் எழுத்து வடிவமாக பார்த்ததை கண்ணால் பார்த்து ரசிப்பதற்கு பலரும் ஆர்வம் கொண்டிருந்தனர். ஆனால் இரண்டாம் பாகத்தை மொத்தமாக சொதப்பி இருந்த மணிரத்தினம் பல விமர்சனங்களுக்கு ஆளானார்.

Also read: பொன்னியின் செல்வன், பாகுபலியை மிஞ்ச வரும் வரலாறு.. கனவை நினைவாக்க வரும் இயக்குனர்

அந்த வகையில் அவர் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படாமல் போகும் என்று தெரிந்தே தான் மாற்றி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் மூலம் அவர் அடைய நினைத்த லாபம் தான். அதாவது அவருடைய மகன் நந்தன் இப்படத்திற்காக வெளிநாட்டு தொழிலதிபரிடம் பேசி 500 கோடியை வாங்கி கொடுத்திருக்கிறார்.

அதை முதலீடாக வைத்து தான் மணிரத்தினம் லைக்காவுடன் இணைந்து இப்படத்தை எடுத்திருக்கிறார். அது மட்டுமின்றி இதன் மூலம் 1000 கோடி லாபம் பார்க்கவும் அவர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் இரண்டாம் பாகம் சரியாக போகாததால் இப்போது மணிரத்தினம் கடனில் தத்தளித்து கொண்டிருக்கிறாராம். இவ்வாறு தெரிந்தே செய்த ஒரு விஷயம் அவருக்கு தரமான அடியை கொடுத்து விட்டது.

Also read: பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்கு கொடுத்த பில்டப்.. டாப் ஹீரோக்களால் பழைய கதையை உருட்டும் சுந்தர் சி

Trending News