வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இணையதளத்தை அலறவிட்ட மணிரத்னம்.. கதிகலங்கி போய் இருக்கும் நபர்கள்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்தினம் படமாக எடுத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படம் இன்று சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி என பலரும் நடித்துள்ளனர்.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனம் சேர்ந்த பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகளின் ஆபரண, ஆடைகளுக்கே பெரிய அளவில் பட்ஜெட் செலவானது.

Also Read :ஜெயம் ரவிக்கு மட்டும் ரெண்டு கொம்பா.. முடியவே முடியாது என மறுத்த மணிரத்தினம்

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை அரசு மற்றும் தனியார் இணையதள சேவைகளில் சட்ட விரோதமாக இந்த படத்தை வெளியிடக்கூடாது என 2405 இணையதளங்களில் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என்று லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரிக்கும் போது லைக்கா நிறுவனத்தின் சார்பில் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, இந்த படம் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளதால் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டால் படத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படும் அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கும் என வாதிட்டு இருந்தார்.

Also Read :பாலிவுட் படங்களின் தோல்விக்கு இது தான் முக்கிய காரணம்.. நாசுக்காக சுதாரித்துக் கொண்ட மணிரத்தினம்

இதனால் பொன்னியின் செல்வன் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டால் அந்த தளத்தை முடக்க உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக புது படங்களை இவ்வாறு திருட்டுத்தனமாக பல இணையதளங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வந்தனர். இதே நிலைமை பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏற்படாமல் இருக்க லைக்கா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது இணையத்தையே அலற விட்டுள்ளார் மணிரத்தினம். இதனால் இதுவரை திருட்டுத்தனமாக படத்தை வெளியிட்டவர்கள் கதிகலங்கி போய் உள்ளனர்.

Also Read :மணிரத்னத்தின் அசைக்கமுடியாத 8 படங்கள்.. ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டும் பொன்னியின் செல்வன்

Trending News