வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆஸ்கருக்காக படத்தை எடுக்கல.. சைடு கேப்பில் பிரம்மாண்ட இயக்குனரை குத்தி காட்டிய மணிரத்தினம்

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் எதிர்பார்த்ததை விட பலத்த வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே படகுழுவினர் அனைவரும் இதற்கான பிரமோஷனில் பிஸியாகி வரும் நிலையில் இயக்குனரும் தன் பங்குக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில் பொன்னியின் செல்வன் 2 தொடர்பான பல கேள்விகளுக்கும் சுவாரசியமாக பதில் அளித்தார். அதில் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்றது பற்றியும், பொன்னியின் செல்வன் ஆஸ்கர் வெல்லுமா என்பது பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது.

Also read: 2ம் பாகத்தில் டல் அடிக்கும் பொன்னியின் செல்வன்.. சுதாரிக்காமல் கோட்டை விட்ட மணிரத்தினம்

அதற்கு பதில் அளித்த மணிரத்தினம் முதலில் ஆர்ஆர்ஆர் பட குழுவினருக்கு தன் வாழ்த்துக்களை கூறினார். அதைத்தொடர்ந்து சத்தம் இல்லாமல் அவர் ராஜமௌலியையும் குத்தி காட்டி பேசி இருக்கிறார். அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நான் ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கவில்லை, அது மக்களை சென்றடைய வேண்டும்.

ஏனென்றால் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்று கதை அதிக அளவு விற்பனையான நாவல் என்ற பெயரை பெற்றுள்ளது. அப்படி ஒரு சிறப்பு மிகுந்த அந்த கதையை திரைப்படமாக கொண்டு வர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அந்தக் கனவு தற்போது நினைவானதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறியிருந்தார்.

Also read: ரஜினிக்கு பெருத்த அவமானத்தை கொடுத்த மணிரத்தினம்.. கமலுக்கு கிடைத்த கௌரவம்

இதன் மூலம் அவர் ராஜமௌலிக்கும் நாசுக்காக ஒரு குட்டு வைத்திருக்கிறார். ஏனென்றால் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதை பெற வேண்டும் என்பதற்காக ராஜமௌலி பல கோடி செலவு செய்திருந்தார். அது மட்டுமல்லாமல் வெளிநாட்டிலேயே கூடாரம் போட்டு தங்கி ஆஸ்கர் விருதையும் கைப்பற்றி நினைத்ததை சாதித்தார். இதுதான் சில நாட்களுக்கு முன்பு வரை திரையுலகில் பரபரப்பு செய்தியாக பேசப்பட்டது.

மேலும் ராஜமௌலி ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்ற ஒரு பேச்சும் கிளம்பியது. அது மட்டுமின்றி பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ராஜமௌலி படத்தோடு ஒப்பிட்டும் சிலர் பேசி வந்தனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மணிரத்தினம் தன் கருத்தை தெளிவாக கூறியிருப்பது பாராட்டுதலை பெற்றிருக்கிறது.

Also read: விஜய், அஜித்தை நெருங்க தகுதி வேணும் பாஸ்.. மனசில் என்ன மணிரத்தினம் நினைப்பா?

Trending News