வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

கமலோடு மோத போகும் சீயான்.. லோகேஷ் கணக்கை முடிக்க மணிரத்தினம் போடும் புது கணக்கு

Actor Kamal: லோகேஷ் இப்போது லியோ படத்தில் பிசியாக இருக்கிறார். விஜய்யுடன் இணைந்து பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சகட்ட அளவில் இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு புது பிளான் ஒன்றை மணிரத்தினம் போட்டுள்ளாராம். இதன் மூலம் லோகேஷின் கணக்கை முடிக்கவும் அவர் திட்டமிட்டு இருக்கிறார். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் தற்போது கமலுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

Also read: பலான படங்களில் நடித்த 6 முன்னணி ஹீரோக்கள்.. உலகநாயகன் நடித்த அந்த மலையாள படம்

ஏற்கனவே இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவந்த நிலையில் தற்போது அதற்கான வேலைகளில் மணிரத்னம் பிஸியாக இருக்கிறாராம். வழக்கம் போல இந்த படத்திற்கும் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைக்க இருக்கிறார்.

ஆனால் இந்த முறை தன்னுடைய இசை ரசிகர்களுக்கு ஒரு மேஜிக்கை காட்ட வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறாராம். அதற்கான வேலையும் ஒரு பக்கம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சூழலில் படத்திலிருந்து முக்கிய தகவல் ஒன்று கசிந்து பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

Also read: யாருக்கோ வந்த வினை என லண்டன் கிளம்பிய விஜய்.. பித்து பிடித்து திரியும் லோகேஷ்

அதாவது மணிரத்தினம் இப்படத்தில் கமலுக்கு வில்லனாக சீயான் விக்ரமை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். மணிரத்தினத்தின் ஆஸ்தான நடிகர்களில் இவரும் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் பொன்னியின் செல்வனில் கூட ஆதித்த கரிகாலன் ஆக இவர் ஸ்கோர் செய்திருந்தார்.

அதனாலேயே விக்ரம் இந்த வாய்ப்பை நிச்சயம் விடமாட்டார் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஏனென்றால் மணிரத்னம் மட்டுமல்லாமல் கமலும் விக்ரமுக்கு நெருங்கிய நண்பர் தான். அதன் அடிப்படையிலேயே இந்த கூட்டணி இணைய இருக்கிறது. அந்த வகையில் இந்த இரண்டு நடிப்பு அரக்கர்களும் ஒருவருக்கொருவர் மோத போகும் காட்சியை திரையில் காண பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also read: ரஜினிக்கு வில்லனாகும் கமல்.. அடுத்த 1000 கோடி வசூலுக்கு லோகேஷ் போடும் புது கணக்கு!

Trending News