திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பொன்னியின் செல்வனுக்கு மணிரத்னம் போட்ட அதிரடி கண்டிஷன்.. அவர் படத்துக்கு மட்டும் இப்படி செய்வது நியாயமா?

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளை அலங்கரிக்க இருக்கிறது. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் ஆரம்பித்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது. இப்படி பொன்னியின் செல்வன் திருவிழா போல் களை கட்டிக் கொண்டிருக்க, மறுப்பக்கம் மணிரத்தினம் சில அதிரடி கண்டிஷன்களையும் போட்டு வருகிறார்.

Also read:முன்பதிவில் பல கோடி லாபம் பார்த்த பொன்னியின் செல்வன்.. மிரள விட்ட மணிரத்னம்

அதாவது அவர் படத்திற்கான டிக்கெட் விலையை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கக் கூடாது என்று அக்ரீமெண்ட் போட்டு வருகிறாராம். முன்னணி நடிகர்கள் மற்றும் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வரும்போது அனைத்து தியேட்டர்களும் ரசிகர்களுக்கான ஸ்பெஷல் ஷோவின் டிக்கெட் விலையை எக்கச்சக்கமாக உயர்த்தி விடும்.

இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் விலையில் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அந்த வகையில் முதல் காட்சிக்காக ரசிகர்கள் 500 முதல் 1000 வரை கொடுத்து டிக்கெட் வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் பார்த்த மணிரத்னம் தற்போது டிக்கெட் விலை நிர்ணயித்ததை விட அதிகமாக வாங்க கூடாது என்று கூறி இருக்கிறார்.

Also read:பொன்னியின் செல்வன் 2 எப்போது வெளிவரும்.? வெளிப்படையாகச் சொன்ன மணிரத்னம்

அதன்படி காலை 4.30 மணிக்கு தொடங்கப்படும் முதல் காட்சியில் தொடங்கி அனைத்து காட்சிகளுக்கும் ஒன்றுபோல் 190 ரூபாய் தான் வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் உங்கள் திரைப்படத்திற்கு மட்டும் இதுபோல் இருந்தால் போதுமா, அனைத்து திரைப்படங்களுக்கும் இந்த விதிமுறை இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில் அடுத்தடுத்து வெளிவரும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் இது பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் வெளியாக இருக்கும் வாரிசு, துணிவு போன்ற திரைப்படங்களின் டிக்கெட் விலை குறைக்கப்படுமா என்ற ஆவலும் தற்போது எழுந்துள்ளது.

Also read:வாங்கிய காசுக்காக உயிரை கொடுத்த மணிரத்னம்.. பொன்னியின் செல்வனை உதயநிதிக்கு கொடுக்காததன் பின்னணியில் இருக்கும் விஷயம்

 

Trending News