வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஹீரோவுக்கு பண வாசனை காட்டாத தந்தை.. மணிரத்னத்திற்கு நோ சொன்ன கோடீஸ்வர அப்பா

Mani Ratnam: மணிரத்தினத்தின் படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என பிரபலங்கள் காத்து கிடக்கிறார்கள். அதுவும் கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தால் பெரிய நட்சத்திரங்கள் கூட அவரது படத்தில் நடிக்க ஆசைப்படுகின்றனர். ஆனால் மணிரத்தினமே ஒருவரை தனது படத்தில் நடிக்க கூப்பிட்டோம் மறுத்துள்ளார் கோடீஸ்வர அப்பா.

அதாவது அந்த பணக்கார தந்தை வளர்ந்தது மணிரத்தினத்தினால் தான். சினிமாவில் மணிரத்தினத்தின் கதாநாயகனாக வலம் வந்த அவர் இப்போது வேறு பரிமாணம் கிடைத்து வில்லனாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை சாக்லேட் பாய் அரவிந்த்சாமி தான்.

Also Read : மணிரத்தினம் படத்தில் மாதவனுக்கு அடித்த ஜாக்பாட்.. மனசார விட்டுக் கொடுத்த நடிகர்

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அரவிந்த்சாமி அதன் பிறகு தளபதி படத்தில் நடித்திருந்தார். பெண்களின் மனதை கொள்ளையடித்த இவர் இப்போது ஹாண்ட்சம் வில்லனாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அதுவும் தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யு என்ற கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி பிச்சு உதறி இருப்பார். அந்த படத்தில் கதாநாயகன் ஜெயம் ரவியே ஓரம் கட்டி விட்டார். தொடர்ந்து இப்போது அரவிந்த் சாமிக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தான் பட வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.

Also Read : 9 வருடத்திற்கு முன்பே மணிரத்தினத்தின் படத்தை தவறவிட்ட கார்த்தி.. டிராக் மாறிபோய் ரூட்டை பிடித்த வந்தியத்தேவன்

இந்நிலையில் அரவிந்த்சாமி தனது மகனை பிசினஸ் மேக்னட் ஆக்க வேண்டும் என்று ஆசையில் இருக்கிறார். சினிமாவுக்கு வந்தால் நிறைய பணம் கிடைக்கும் என்றாலும் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டாராம். ஆனால் அவரது மகனுக்கோ மாடலிங் மீது மோகத்தில் இருக்கிறார். இப்போது அரவிந்த்சாமி மகனை எப்படியாவது ஹீரோ ஆக்கிவிட வேண்டும் என மணிரத்தினம் ஆசைப்பட்டு உள்ளார்.

ஆனால் அரவிந்த்சாமி இதுக்கு மறுப்பு தெரிவித்து விட்டாராம். தனது மகன் சொந்தமாக தொழில்தான் தொடங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். தான் சினிமாவில் நடிகனாக இருந்தாலும் தனது மகனை இந்த துறைக்கு அனுப்ப மனமில்லாமல் இருக்கிறார் அரவிந்த்சாமி.

Also Read : மணிரத்னம் பட பிரபலத்தை காதலித்த அகர்வால் நடிகை.. திடீர் மரணத்தால் கேரியரை தொலைத்த நடிகர்

Trending News