வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தேர்தல் முடிந்த கையோடு டெல்லிக்கு போன கமல்.. சண்டையை தாறுமாறாக தெறிக்கவிட்ட மணிரத்தினம்

Manirathinam and Kamal: கமலைப் பொறுத்தவரை கமர்சியலாக நடித்து வெற்றி பெற்று லாபத்தை பார்க்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர் அல்ல. எத்தனை வருடங்கள் ஆனாலும் பேசும் படமாக சாதனை படைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்.

அப்படி இவருடைய கேரக்டரில் எத்தனையோ படங்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட இவரை வைத்து மணிரத்தினம் 34 வருடங்களுக்கு முன் எடுத்த நாயகன் படம் இப்பொழுதும் பெயர் பெற்று வருகிறது.

அந்த வகையில் மறுபடியும் இவர்களுடைய கூட்டணியில் தற்போது தக் லைஃப் படம் உருவாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன் சென்னையில் சூட்டிங் நடைபெற்றது. பின்பு மக்களவைத் தேர்தலில் கமல் பிரச்சாரம் செய்ததால் படப்பிடிப்புக்கு கொஞ்சம் பிரேக் விட்டிருந்தார்.

மணிரத்தினத்திற்கு கிடைத்த ராஜ மரியாதை

இதனை அடுத்து கமல் தற்போது பழையபடி ஃபுல் ஃபார்ம்-க்கு வந்து விட்டதால் தட் லைஃப் மொத்த டீமும் ஷூட்டிங்காக டெல்லிக்கு போய் இருக்கிறார்கள். அங்கே இருக்கும் ரெட்போர்ட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கே போன கமலை விட மணிரத்தினத்துக்கு தான் அதிக ராஜ மரியாதை கிடைக்கிறதாம்.

பொதுவாக அங்கே சூட்டிங் எடுப்பது மிகப்பெரிய ரிஸ்க். ரெண்டு நிமிஷம் நின்னால் கூட கமாண்டஸ் வந்து விடுவார்கள். ஆனால் அப்படிப்பட்ட இடத்தில் மணிரத்தினம் சண்டை காட்சிகளை தெறிக்க விடுகிறாராம். அதுவும் கார், கன் சூட் போன்றவைகளை வைத்து அதிக ரிஸ்க் எடுத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

இந்த மாதிரி அதிக ரிஸ்க் எடுத்து மணிரத்தினம் ஒரு படத்தை எடுத்தாலே அந்த படம் கண்டிப்பாக மக்களிடம் வெற்றி பெற்று விடும். அதனால் கமல் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைப் படமும் வெற்றி பெறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மேலும் இவர்களுடன் சிம்பு, திரிஷா, ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் போயிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 20 நாட்கள் ஷூட்டிங் அங்கே நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். மொத்த படப்பிடிப்பையும் வேகமாக முடித்து அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Trending News