சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் பல இளம் நடிகர்களுக்குள் தனித்துவமாய் பார்க்கப்பட்ட நான்கு ஹீரோக்கள் நடித்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு சரியான வழிகாட்டல் இல்லாமல் முட்டி மோதி வருகின்றனர். அப்படி ஜெயித்த ஹீரோக்களையும் சறுக்கிய ஹீரோக்களையும் பார்க்கலாம்.
ஹரிஷ் கல்யாண்: 20 படங்கள் நடித்தும் கூட இரண்டு படங்கள் தான் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி அமைந்தது. பார்க்கிங், லப்பர் பந்து, இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. ஆனால் ஒரு கோடி வரை சம்பளம் கேட்டு பேராசையில் அனைத்தையும் கெடுத்து கொண்டார்.
கவின்: கிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். சூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் ஹெட் வெயிட் உடன் நடந்து கொள்கிறாராம், கேரவன் சரியில்லை, லிப்ட் சரியில்லை சூட்டிங் வரமாட்டேன் என மொத்த யூனிட்டுக்கும் குடைச்சல் கொடுத்து வருகிறாராம்.
பிரதீப் ரங்கநாதன்: விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து தன் பெயரை கெடுத்து கொள்கிறார். தற்போது இவர் நடித்து வரும் படம் LIK. இந்தப் படம் ஜவ்மிட்டாய் போல் இழுத்துக் கொண்டே செல்கிறது. தயாரிப்பாளர் உடன் பிரச்சனை வந்ததால் விக்னேஷ் சிவனே இதை தயாரிக்கிறார்.
ஜெய்பீம் மணிகண்டன்: மற்ற ஹீரோக்களை ஒப்பிடும்போது இவர் மனிதருள் மாணிக்கமாய் தெரிகிறார். சொன்ன நேரத்திற்கு பைக்கிலேயே சூட்டிங் வந்து விடுவாராம். யாருக்கும் எந்த பாதகமும் இன்றி வேலையை முடித்துவிட்டு செல்வாராம். தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த குடும்பஸ்தன் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.