வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சூப்பர் ஸ்டாராக மாறி அரங்கத்தை அதிர வைத்த ஜெய்பீம் மணிகண்டன்.. அதிலும் குட்டி கதை பிரமாதம்

ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் மணிகண்டன். ஒரு எழுத்தாளராக இவர் பல திரைக்கதைகளை எழுதியிருந்தாலும் காலா, விக்ரம் வேதா போன்ற திரைப்படங்கள் தான் இவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது.

அந்த வகையில் இவர் தற்போது ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் ஏராளமான புகழை சம்பாதித்துள்ளார். சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மணிகண்டன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல் பேசி அரங்கத்தையே கைத்தட்டலால் அதிர வைத்தார்.

தற்போது அவர் பேசிய அந்த வீடியோ சோசியல் மீடியாவில் கலக்கிக் கொண்டிருக்கிறது. அவர் ரஜினி போன்று பேசியது மட்டுமல்லாமல் தலைவர் மாதிரியே குட்டிக் கதையும் கூறினார். அவர் கூறியிருப்பதாவது, ஒரு மனிதர் மருத்துவரிடம் சென்று என்னால் சிரிக்க முடியவில்லை என்று கூறுகிறார்.

அதற்கு அந்த மருத்துவர் பக்கத்தில் இருக்கும் சர்க்கஸில் கோமாளிகளின் நிகழ்ச்சி நடைபெறுகிறது அதை பாருங்கள் என்று கூறுவார். அதற்கு அந்த நபர் அந்த கோமாளியே நான்தான் என்று கூறுவார். இப்படி ஒரு கதையை சூப்பர் ஸ்டார் குரலில் பேசிய மணிகண்டன் எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அவருடைய இந்த பேச்சை அந்த விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் ரசித்து கேட்டனர். அவருடைய இந்த பேச்சை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் அப்படியே சூப்பர் ஸ்டார் பேசுவது போன்று இருக்கிறது என்று பலரும் அவரை பாராட்டுகின்றனர்.

அந்த அளவுக்கு அவர் அற்புதமாக பேசி ரசிகர்களை கவர்ந்தார். இதை பார்த்த ரஜினியின் ரசிகர்கள் அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுகின்றனர். மேலும் சிலர் அவருக்கு இவ்வளவு திறமைகள் இருக்கிறதா என்று வியப்பாகவும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Trending News