வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

காதலை இப்டி கூட சொல்லலாம்.. மணிகண்டனின் லவ்வர் ஸ்னீக் பீக் வீடியோ

Lover Sneak Peek Video: எல்லா வகை ஆடியன்ஸையும் கவரும் வகையில் இருக்கும் ஃபீல் குட் படங்கள் தற்போது வெளிவருவது அதிகமாக இருக்கிறது. அதன்படி சமீபத்தில் விஜய் டிவி ரியோவின் ஜோ நல்ல விமர்சனங்களை பெற்றது. அதேபோல் தற்போது குட் நைட் மணிகண்டன் நடிப்பில் லவ்வர் உருவாகி இருக்கிறது.

வரும் 9ம் தேதி வெளிவர இருக்கும் இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் பெயரை பார்த்ததுமே இது காதலர் தின ஸ்பெஷல் என அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

Also read: பக்கத்து வீட்டு பையன் போல் மணிகண்டன் கலக்கிய 5 படங்கள்.. மறக்கவே முடியாத ஜெய்பீம் ராசக்கண்ணு

தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவும் அப்படித்தான் இருக்கிறது. அதன் ஆரம்பத்தில் ஹீரோயின் தன்னுடைய காதலை விவரிப்பது போல் இருக்கிறது. அதில் மணிகண்டன் விஜய் சேதுபதி போல் மிமிக்ரி செய்வதும், ஹீரோயின் அதை பார்த்து இம்ப்ரஸ் ஆவதுமாக வீடியோ செல்கிறது. அதை தொடர்ந்து கல்லூரியில் படிக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பது.

பின்பு அது நட்பாக வளர்வது போன்ற காட்சிகள் எதார்த்தமாக இருக்கிறது. அதேபோல் வீடியோவின் இறுதியில் ஹீரோயினின் 21 வது பிறந்தநாள் வருகிறது. அப்போது ஹீரோ ஒரு பெட்டியில் 21 பரிசு பொருட்களை வைத்து ஹேப்பி பர்த்டே பொண்டாட்டி என்ற கார்டையும் வைக்கிறார்.

Also read: 6 வருட காதலில் ஏற்பட்ட பிரிவு.. மணிகண்டனின் லவ்வர் ட்ரெய்லர்

இப்படியும் காதலை சொல்லலாம் என்பது போல் வந்துள்ள இந்த ஸ்னீக் பீக் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் எதார்த்தமான நடிகராக இருக்கும் மணிகண்டனுக்கு இந்த லவ்வர் நிச்சயம் வெற்றி படமாக அமையும் எனவும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Trending News