வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

6 வருட காதலில் ஏற்பட்ட பிரிவு.. மணிகண்டனின் லவ்வர் ட்ரெய்லர்

Lover Trailer : ஜெய் பீம் படத்தில் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் தான் மணிகண்டன். தொடர்ந்து வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் வெளியான சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட குட் நைட் படம் வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து இப்போது லவ்வர் படத்தில் நடித்திருக்கிறார். பிரபு ராம் ரியாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் லவ்வர் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

அதாவது ஆறு வருட காதலுக்கு பின் மணிகண்டன் மற்றும் கௌரி பிரியா இருவரும் பிரிந்துள்ளனர். இந்நிலையில் கௌரியின் பிறந்த நாளை முன்னிட்டு மணிகண்டன் வாழ்த்து குறுஞ்செய்தி அனுப்புகிறார். கடந்த 6 வருடங்களாக ஒன்றாக பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் இந்த முறை தனியாக கொண்டாடுகிறாய் என்று கூறுகிறார்.

Also Read : மணிகண்டன் உடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை.. ரகசியமாய் நடந்த நிச்சயதார்த்தம்

அதாவது ஏழ்மையாக இருக்கும் மணிகண்டனை ஸ்ரீ கௌரியை காதலிக்கிறார். நண்பர்கள் முன்னால் மணிகண்டனை அறிமுகப்படுத்த ஸ்ரீகௌரி தயங்குகிறார். இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது. மணிகண்டன் குடித்துவிட்டு ஸ்ரீ கௌரி நண்பர்கள் முன் அசிங்கப்படுத்துகிறார்.

இதனால் எரிச்சல் அடைந்து கதாநாயகி அவரை விட்டுப் பிரிகிறார். ஆனால் இருவருமே ஒவ்வொருவருக்கு உண்மையாக காதலித்து வரும் நிலையில் கடைசியில் இவர்கள் இணைந்தார்களா என்பது தான் லவ்வர் படத்தின் கதை. மேலும் இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது படத்தை விரைவில் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தூண்டப்படுகிறது.

Trending News