Lal Salaam – Lover : இப்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஓடிடியில் வெளியாகி விடுகிறது. ஆனால் சமீப காலமாக வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிடுகிறது.
அந்த வகையில் தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் படம் வெளியாகி இருந்தது.
இந்த படத்திற்கு போட்டியாக மணிகண்டனின் லவ்வர் படமும் ரிலீஸ் ஆனது. சூப்பர் ஸ்டார் என்று நட்சத்திர அந்தஸ்துக்காக மட்டும் தான் லால் சலாம் ஓரளவு வசூலை பெற்றது.
லால் சலாம் பட விமர்சனம்
நெகட்டிவ் விமர்சனங்கள் பெற்ற நிலையில் சமீபகாலமாக ஐஸ்வர்யா லால் சலாம் தோல்விக்கான காரணங்களை ஊடகங்களில் கூறி வருகிறார்.
மேலும் தியேட்டரிலேயே லால் சலாம் படம் எதிர்பார்த்த லாபம் பெறாததால் லைக்கா பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதை அடுத்து ஓடிடியில் இப்படத்தை வாங்க எந்த நிறுவனமும் முன் வரவில்லை.
லவ்வர் படத்தின் வெற்றி
சூப்பர் ஸ்டார் படத்திற்காக இந்த நிலைமை என ரசிகர்கள் பரிதாபப்படும் அளவிற்கு அவரது மகள் ஐஸ்வர்யா ஏற்படுத்திவிட்டார். ஆனால் லால் சலாமுக்கு போட்டியாக வெளியான லவ்வர் படம் திரையரங்குகளிலேயே நல்ல வசூலை பெற்றது. இப்போது ஓடிடி நிறுவனத்திற்கும் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
அதாவது டிஸ்னி ஹாட் ஸ்டார் லவ்வர் படத்தை வாங்கியுள்ள நிலையில் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.
மேலும் மணிகண்டன் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வரும் நிலையில் லவ்வர் வெற்றியை தொடர்ந்து இப்போது நிறைய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.