திங்கட்கிழமை, பிப்ரவரி 3, 2025

இப்பதான் BMW வாங்கினாங்க, அதுக்குள்ள இன்னொரு கார்.. மாஸ் காட்டும் மணிமேகலை

சன் மியூசிக் தொகுப்பாளருக்கு ஆக இருந்து தற்போது விஜய் டிவியில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளவர் மணிமேகலை. அதற்கு முக்கிய காரணம் விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டடித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சொல்லலாம். இந்த நிகழ்ச்சி பல பேரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழ் சிவாங்கி பாலா என பலரும் சினிமாவில் தற்போது காமெடி நடிகர்கள் ஆகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வரத் தொடங்கிவிட்டனர். அவர்களைத் தொடர்ந்து தொகுப்பாளினி மணிமேகலையும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வெற்றி நடை போட்டு வருகிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற கோமாளிகள் பலரும் தங்களுக்கு என ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் தாங்கள் செய்யும் சேட்டை யான விஷயங்களை வீடியோக்களாக பதிவிட்டு வருகின்றனர். அதற்கு லைக்குகளும் குவிந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் மணிமேகலை தன்னுடைய கணவர் உசேன் என்பவருடன் சேர்ந்து ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்தார். தற்போது அவர்களை ஒரு மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்கள் பின் தொடர்கின்றனர். மேலும் அவர்களது வீடியோக்கள் ஒரு மில்லியன் பார்வையாளர்களை அசால்டாக குவித்து வருகின்றன.

தற்போது பெரிய அளவில் வருமானம் ஈட்டி வரும் மணிமேகலை சமீபத்தில்தான் பிஎம்டபிள்யூ கார் வாங்கினார் என்பது அனைவருக்குமே தெரியும். அது வாங்கி கொஞ்ச நாள் கூட ஆகாத நிலையில் தற்போது புதியதாக ஒரு காரை வாங்கி அனைவரையும் அசர வைத்துள்ளார்.

இந்த புதிய காரும் பல லட்சம் விலை கொண்டது. இப்படி நாளுக்கு நாள் தங்களுடைய பொருளாதாரத்தில் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் மணிமேகலை மற்றும் உசேன் ஜோடியை கண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் அவர்களது ரசிகர்கள்.

manimegalai
manimegalai

Trending News