ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

பிரியங்கா உள்ள வரும் போதே இது நடக்கும்னு தெரியும்.. மணிமேகலை இது ரொம்ப லேட்டுமா!

VJ Manimegalai: தொகுப்பாளினி மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். கடந்த நான்கு சீசன்களில் கோமாளியாக கலக்கியவர் மணிமேகலை.

இந்த சீசனில் ரக்சன் உடன் இணைந்து தொகுப்பாளினியாக களமிறங்கினார்.
விஜய் டிவியை பொறுத்த வரைக்கும் எல்லாமே டிஆர்பி கணக்கு தான். யாரை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கிறார்களோ அவர்களுக்கு தான் அங்கு முன்னுரிமை.

அப்படி குக் வித் கோமாளியில் அமோக ஆதரவுடன் இருந்தவர்கள் தான் புகழ் மற்றும் மணிமேகலை. ஆனால் இந்த சீசனில் இவங்க இரண்டு பேரிடமுமே ஏதோ ஒன்னு மிஸ் ஆகிக்கொண்டே இருந்தது.

அது மட்டும் இல்லாமல் பிரியங்கா இந்த நிகழ்ச்சிக்கு உள்ளே வரும்போது முதல் எபிசோடு எல்லோரும் பார்த்து இருந்தால் இப்போது மணிமேகலை வெளியேறுவதற்கான காரணம் சரியாக தெரிந்து இருக்கும். அதாவது மணிமேகலைக்கு குக் வித் கோமாளியில் அதுதான் முதல் எபிசோடு.

மணிமேகலை இது ரொம்ப லேட்டுமா!

ஆனால் அவரை பேச விடாமல் அந்த இடத்தை மொத்தமாக எடுத்துக் கொண்டார் பிரியங்கா. அது மட்டுமில்லாமல் புகழ், குரேஷி, மணிமேகலை என பழைய ஆட்கள் தங்களுடைய காமெடிகளை வெளியில் கொண்டு வராதவாறு பிரியங்கா பார்த்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

எல்லா இடத்திலுமே அவருடைய பங்கு அதிகமாக இருக்கும். போதாத குறைக்கு ராமருடன் லவ் ட்ராக் ஏற்படுத்தி முகம் சுளிக்கும் அளவுக்கு அதை கொண்டு போனார். பிரியங்காவை பிக் பாஸில் இருந்து கவனித்து வருபவர்களுக்கு அவர் எப்படிப்பட்ட ஆள் என்று தெரியும்.

உள்ளே வரும்போது ராஜு என்னுடைய சிறந்த நண்பன் என்று சொல்லி வந்து விட்டு, அதன் பின்னர் அவர் ஆடிய ஆட்டமெல்லாம் நம் கண் முன் வந்து போகும். என்னதான் பெரிய தொகுப்பாளினியாக இருந்தாலும், வளர்ந்து வருபவர்களுக்கு இடம் கொடுத்தால் தான் அவர்களின் பெயர் நிலைத்து நிற்கும்.

அதை விட்டுவிட்டு நான் தான் எல்லா இடத்திலும் பெரிய ஆள் போல் தெரிய வேண்டும் என நினைத்தால் இது போன்ற குற்றச்சாட்டுக்கு தான் ஆளாக வேண்டும்.

குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசனை தொடர்ந்து பார்த்தவர்கள் தற்போது சொல்வது மணிமேகலை இரண்டு, மூன்று எபிசோடுகளிலேயே இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும் என்பதுதான்.

Trending News