திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

மணிரத்னம் திரைக்கதையில் வெளிவந்த 5 படங்கள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய வித்தியாசமான பட லிஸ்ட்

மணிரத்தினம் தமிழ்சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் சாம்ராஜ்யத்தை கொண்டுள்ளவர். ஒரு இயக்குனராக, திரைக்கதை எழுத்தாளராக, ஒரு தயாரிப்பாளராக பல முகங்களைக் கொண்டவர் மணிரத்னம்.

6 நேஷனல் பிலிம் அவார்டு, 4 பிலிம்பேர் அவார்ட், 6 பிலிம்பேர் அவார்ட் சவுத் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். இவரின் இயக்கத்தில் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் மௌனராகம், நாயகன், ரோஜா, பம்பாய் போன்ற படங்களாகும்.

இதற்காக பல விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளார், சினிமாவில் மணிரத்தினத்தின் இன்னொரு முகம் என்று பார்த்தால் திரைக்கதை எழுத்தாளராக வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.

இந்திரா:

சுகாசினி மணிரத்தினம் இயக்கத்தில் அனுஹாசன், அரவிந்த்சாமி, ராதாரவி, நாசர், ஜனகராஜ் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1995ல் வெளிவந்த படம் இந்திரா. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருப்பார். அனைத்து பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. கிராமப்புறத்தில் இருக்கும் ஜாதியை மையமாக வைத்து ஒரு பெண் போராடி ஜெயிப்பது போன்ற கதை அமைக்கப்பட்டிருக்கும்.

சத்ரியன்:

சுபாஷ் இயக்கத்தில் மணிரத்தினத்தின் திரைக்கதையில் 1990-ல் வெளிவந்த படம் சத்ரியன். விஜயகாந்த்,பானுப்ரிய,ரேவதி,திலகன் போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள். ஒரு அரசியல்வாதி எதிர்த்து நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரி எப்படி சவால்களை எதிர் கொள்கிறார் என்பது தான் கதை. படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திலகன் மிரட்டி இருப்பர். ‘சத்ரியனுக்கு சாவே இல்லை என்று சொல்லிட்டு என் காலுக்கு கீழே நாய் மாதிரி செத்து கிடக்குற’ என்ற வசனம் இன்றளவும் ரசிக்கக் கூடியதாக அமைந்தது. இளையராஜாவின் இசை இந்த படத்திற்கு படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

தாஜ்மஹால்:

பாரதிராஜா இயக்கத்தில் மணிரத்தினத்தின் திரைக்கதையில் உருவான படம் தாஜ்மஹால். இந்த படத்தில் மனோஜ்,  ரியா சென், ரேவதி, ராதிகா, ரஞ்சிதா போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்திருப்பார் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது இந்த படமும் இரண்டு ஜாதியினரை அடிப்படையாக வைத்து தீபாவளிக்கு வெளிவந்து சுமாராக மட்டுமே ஓடியது.

டும் டும் டும்:

மணிரத்தத்தின் திரைக்கதையில் மாபெரும் வெற்றி பெற்ற படமாக டும் டும் டும், 2001ல் வெளிவந்தது. ஜோதிகா, மாதவன், மணிவண்ணன், விவேக் போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். ஜோதிகா மற்றும் மாதவனுக்கு இடையே திருமணம் நிச்சயம் நடைபெற்று அதனை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று இரண்டு பேரும் சில பிரச்சனைகளை குடும்பங்களுக்கு இடையே ஏற்படுத்தி, மீண்டும் ஒரு கால கட்டத்தில் இருவருக்கும் காதல் ஏற்படும் போது இரண்டும் குடும்பத்தை எப்படி சேர்த்து சேர்க்கிறார்கள் என்பது தான் கதை. மாதவனுக்கு இந்த படம் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக அமைந்தது.

வானம் கொட்டட்டும்:

தனசேகரன் இயக்கத்தில் மணிரத்தினத்தின் திரைக்கதையில் 2020-ல் வெளிவந்த படம் வானம் கொட்டட்டும். சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு பாக்கியராஜ் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது. இந்த படத்திற்கு சித் ஸ்ரீராம் இசை அமைத்திருப்பார். சரத்குமார் இந்த படத்தில் ஒரு கைதியாக இருந்து மீண்டும் குடும்பத்திற்குள் வரும் போது, என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க என்பதை மையமாக வைத்து இந்த கதை நகரும். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படமாக பார்க்கப்பட்டது.

இப்படி சினிமாவை முழு மூச்சாக கொண்டுள்ள மணிரத்தினத்தின் படைப்புகள் தமிழ் சினிமாவிற்கு பொக்கிஷம் என்றே கூறலாம். அவர் இயக்கத்தில் வெற்றி பெற்ற படங்களை ரசிகர்கள் இன்றளவும் ரிப்பீட் மோடில் பார்த்து தான் வருகின்றனர்.

Trending News