இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை என பல துறைகளில் தடம் பதித்தவர் இயக்குனர் மணிரத்தினம். 2002-ல் இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கி கௌரவித்தது. இவருடைய திரைப்படங்களில் ரயிலும், மழையும் இல்லாமல் இருக்காது. மணிரத்னம் தயாரித்து வெற்றி பெற்ற திரைப்படங்களின் தொகுப்பு. ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக பல சாதனைகள் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சத்ரியன்: மணிரத்னத்தின் உதவியாளர் சுபாஷ் இயக்கிய இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ரேவதி, திலகன் ஆகியோர் நடித்திருந்தனர். 1990ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. 90களில் வெளியான படங்களில் சிறப்பான பழமாகும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி கண்ட படம்.
பம்பாய்: மணிரத்னம் பம்பாய் படத்தை இயக்கி, தயாரித்து இருந்தார். 1992 மற்றும் 1993 இல் பம்பாயில் நடைபெற்ற கலவரத்தின் உண்மைச் சம்பவங்களை கற்பனையாக எடுக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா, நாசர், பிரகாஷ்ராஜ் என பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.
அலைபாயுதே: 2000 ஆம் ஆண்டு மணிரத்னம் தயாரித்து, இயக்கிய படம் அலைபாயுதே. இத்திரைப்படத்தில் மாதவன்,ஷாலினி சொர்ணமால்யா முதலியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் இளமை துள்ளுவதோடு காதல் ஜோடி கல்யாணத்திற்குப் பின் ஊழலை ஊடலும் கூடலும் புன்னகையுடன் சொன்ன படம்.
கன்னத்தில் முத்தமிட்டால்: மணிரத்னம் இயக்கி தயாரித்த படம் 2002ல் வெளியான கன்னத்தில் முத்தமிட்டாள். இப்படத்தில் மாதவன்,சிம்ரன், பார்த்திபன் மகள் கீர்த்தனா, நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். சுஜாதாவின் அமுதாவும் அவனும் என்ற சிறுகதையை திரைக்கதையாக மாற்றினார் மணிரத்னம். இப்படத்தில் இலங்கை இன மக்களின் பிரச்சனையை பிரதிபலித்து இருப்பார். இது தோல்வி அடைந்தது.
கடல்: நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடிகை ராதா மகள் துளசி இருவரும் அறிமுகமான படம் இப்படத்தை இயக்கியவர் மணிரத்னம். 2013 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்து இருப்பார். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். கடல் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பெருசா தோல்வி அடைந்த படம்.
செக்க சிவந்த வானம்: அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி,ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதீரா என முன்னணி நடிகர்கள் நடித்திருந்த திரைப்படம் செக்கச் சிவந்த வானம். மணிரத்னம் இயக்கி, தயாரித்த இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக பல குறைகளைக் கொண்டிருந்தாலும் பல நட்சத்திரங்கள் கூட்டணியால் வசூல் வேட்டையாடியது.