பொன்னியின் செல்வன் படத்தின் மீதான சுவாரஸ்யம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து இப்போது தயாரிப்பு வேலைகள் மட்டும் நடந்து கொண்டிருக்கின்றன. படம் வரும் 30 ஆம் தேதி ரிலீசாகி கொண்டிருக்கிறது.
பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவு என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மக்கள் திலகம் MGR ஆரம்பித்து, கமல் வரைக்கும் இந்த படத்தை எடுக்க முயற்சி செய்தனர். அவர்களின் கனவுகளை எல்லாம் மணிரத்தினம் இப்போது நிஜமாக்கி இருக்கிறார்.
Also Read: பொன்னியின் செல்வனில் நயன்தாரா குரலா? நந்தினியின் கம்பீரக் குரல் இவருடையதுதான்
எழுத்தாளர் ஜெயமோகன் இப்போது இந்த படத்தை பற்றி ஒரு புதிய தகவலை சொல்லி இருக்கிறார். அதாவது முதன் முதலில் மணிரத்தினம் பொன்னியின் செல்வனை படமாக்க நினைத்த போது வந்திய தேவன் கேரக்டரில் விஜயும், அருள்மொழிவர்மனாக மகேஷ் பாபுவையும் நடிக்க வைக்கவே ஆசைப்பட்டு இருக்கிறார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இது நடக்காமல் போனது.
இப்போது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில் அருள்மொழியாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கின்றனர். விக்ரம் ஆதித்ய கரிகாலன், த்ரிஷா குந்தவை, ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலி, ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் மந்தாகினி, ஜெயராம் ஆழ்வார்க்கடியான் நம்பி, சரரத்குமார் பெரியபழுவேட்டரையர், பார்த்திபன் சின்ன பழுவேட்டரையராகவும் நடிக்கின்றனர்.
Also Read: பொன்னியின் செல்வன் பட விழாவிற்கு வராத ஒரே பிரபலம்.. பழிக்கு பழிதீர்த்த மணிரத்தினம்
ஏற்கனவே இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினி தன்னுடைய பார்வையில் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை கூறி அப்படி ஒரு வெர்சனுக்கு மக்களை ஏங்க வைத்து விட்டார். அதில் வந்தியத்தேவனாக ரஜினி, அருள்மொழி வர்மனாக கமல் மற்றும் ஆதித்ய கரிகாலனாக விஜயகாந்த் என்று கூறினார்.
இப்போது எழுத்தாளர் ஜெயமோகன், இயக்குனர் மணிரத்னத்தின் முதல் வெர்சனான விஜய்-மகேஷ் பாபு கூட்டணியை பற்றி கூறியிருக்கிறார். விஜய் இதுவரை வரலாற்று படங்கள் எதிலும் நடித்ததில்லை. ஒருவேளை இந்த படத்தில் விஜய் வந்தியத்தேவனாக நடித்திருந்தால் விஜய் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக இருந்து இருக்கும் .
Also Read: சூப்பர் ஸ்டார் ஆசைப்பட்ட பொன்னியின் செல்வன் கேரக்டர்.. வாய்ப்பு கேட்டும் கொடுக்க மறுத்த மணிரத்தினம்