Director Manirathnam: தமிழ் சினிமாவையே புரட்டி போடும் அளவிற்கு படத்தை எடுக்கக்கூடிய கெட்டிக்காரத்தனமான இயக்குனர் மணிரத்தினம். எப்படிப்பட்ட நடிகரும் இவருடைய படத்தில் நடித்தால் அவர்களுக்கு மக்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கைராசியான ஒரு இயக்குனராகவும் இவரைச் சொல்லலாம்.
இவரை வைத்து சினிமாவில் முன்னேறியவர்கள் பல பேர். அதில் ஒரு நடிகர் இவருடைய இயக்கத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் வெற்றியை கொடுத்து வந்திருக்கிறார். அதன் மூலம் இவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டவர். அப்படிப்பட்ட ஹீரோ சினிமா கேரியரை மறக்கும் படியான ஒரு கோர விபத்து இவருக்கு ஏற்பட்டது.
Also read: மணிரத்தினம், கமல் காம்போவில் இணைந்த முக்கிய பிரபலம்.. மல்டி ஸ்டார் படமாக உருவாகும் உலகநாயகன் 234
அதாவது காரில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு விபத்தால் இவருடைய முதுகுத்தண்டில் அடிபட்டு நடக்க கூட முடியாத நிலையில் மிகவும் அவதிப்பட்டு இருக்கிறார். அத்துடன் இவருடைய அழகான தோற்றத்தை இழந்து உடல் எடை பெருத்து காணப்பட்டிருக்கிறார்.
அதன் பின் இனிமேல் அவ்வளவுதான் சினிமாவை மறந்து விடலாம் என்று அப்படியே ஒதுங்கி விட்டார். அந்த ஹீரோ வேறு யாருமில்லை 90களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அரவிந்த்சாமி தான். இவருக்கு ஏற்பட்ட அந்த கோர விபத்தால் முடிகளை இழந்து சொட்டையாக, உடம்பில் எடை போட்டு பார்க்கவே வித்தியாசமாக மாறிவிட்டார்.
அப்படிப்பட்ட இவர் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த நிலையில், இவரை இரண்டாவது முறையாக சினிமாவில் தூக்கி விட்டவர் இயக்குனர் மணிரத்தினம். எந்த வாய்ப்பும் இவரை தேடி வராத நிலையில் 2013 ஆம் ஆண்டு கடல் படத்தின் மூலம் இவருக்கு சாம் பெர்னாண்டோ என்ற கேரக்டரை கொடுத்து நடிக்க வைத்தார்.
அதன் பிறகு தான் தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யு கேரக்டர் இவருக்கு கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு தற்போது அனைவர் மனதிலும் நச்சென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இவருடைய சினிமா வாழ்க்கையில் மணிரத்தினம் என்பவர் எல்லாவிதத்திலும் குருவாக இருந்து அரவிந்த்சாமிக்கு விளக்கேற்றி வைத்திருக்கிறார்.
Also read: நிற்க கூட நேரம் இல்லாமல் பறக்கும் உலக நாயகன்.. அடுத்த கட்ட சம்பவத்திற்கு தயாராகும் மணிரத்தினம்