தமிழ் சினிமாவின் பெருமை தான் மணிரத்னம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவை இந்திய அளவில் கொண்டு போய் சேர்ந்தவர். ஒரு காலத்தில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தனர். அதில் ஒருவர்தான் மணிரத்தினம். பகல் நிலவு என்ற படத்தின் மூலம் தான் தமிழில் இயக்குனராக அறிமுகமானார்.
ஆனால் 1986ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான மௌன ராகம் திரைப்படத்தின் மூலம் தான் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் மணிரத்தினம். இன்றுவரை இப்படத்திற்கான ரசிகர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
மணிரத்தினம் மௌன ராகம் படத்திற்கான கதையை முழுவதுமாக எழுதி முடித்துள்ளார். முதலில் ரேவதி கதாபாத்திரத்திற்கு ஜோடி இல்லாமல்தான் கதை எழுதப்பட்டது. திருமணத்திற்கு முன்பே காதலித்தது போல் சொல்வதை விட அந்த காட்சிகளை வைத்தால் என்ன? என்று மணிரத்னம் யோசித்தாராம். ஆனால் அது தேவையில்லாமல் நேரத்தை இழுக்கும் என நினைத்து அரை மனதுடன் தான் கார்த்தி கதாபாத்திரத்தை எழுதினாராம்.
இன்றுவரை கார்த்தியின் கதாபாத்திரம் தான் இப்படத்தில் பேசப்பட்டு வருகிறது. இப்படத்தில் கார்த்திக் துருதுருவென இருக்கும் நபராக நடித்திருப்பார். இதுவரை தமிழ் சினிமாவில் இதே போல் பல நடிகர்கள் நடித்திருந்தாலும் கார்த்தியின் நடிப்பு தான் இந்த கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தியிருந்தது .
அதன் பிறகுதான் சினிமாவில் துருதுருவென ரசிக்கும்படியான கதாபாத்திரத்தை பல இயக்குனர்கள் உருவாக்கியுள்ளனர். ஏன் நான் மகான் அல்ல படத்தில் கூட கார்த்திக் மௌன ராகம் படத்தில் நடித்திருந்த நவரச நாயகன் கதாப்பாத்திரம் போலவே நடித்திருப்பார்.