திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நடிச்ச அஞ்சு படமும் அட்டர் பிளாப்.. மணிரத்தினம் கைகொடுத்தும் கரை சேர முடியாத நடிகை

Director Maniratnam: ஒரு சில நடிகைகளுக்கு நல்ல நடிப்பு திறமை இருந்தும், வசீகரமான முக அழகு இருந்தும் ஏதோ ஒரு காரணத்தால் அவர்களால் சினிமாவில் ஜெயிக்க முடியாமல் போய்விடுகிறது. அப்படி ஒரு ஹீரோயின் தான் இந்த நடிகை. மற்ற மொழி சினிமாக்களில் கொண்டாடப்படும் இவர், தமிழ் சினிமாவில் தொடர்ந்து தோல்விகளை தான் சந்தித்து இருக்கிறார்.

முன்னணி நடிகைகள் பலருக்கும் தங்களுடைய வாழ்நாளில் எப்படியாவது ஒரு முறை இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் படம் நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். இந்த நடிகைக்கு தமிழில் இரண்டாவது படமே மணிரத்னம் இயக்கத்தில் தான் அமைந்தது. ஆனால் அந்த படம் மணிரத்தினத்திற்கே தோல்வி படமாக அமைந்துவிட்டது. இதனால் நல்ல ரீச் ஆக வேண்டிய நடிகை அப்படியே மார்க்கெட்டை இழந்தார்.

Also Read:அஜித், விக்ரமுக்கு ஜோடியாக நடித்து துணிக்கடையை நடத்தி வரும் நடிகை.. மொத்தமாக கைநழுவி போன வாய்ப்புகள்

தமிழில் ஸ்ரீங்காரம் , காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா என ஐந்து படங்களில் நடித்த அதிதி ராவ் தான் அந்த நடிகை. நன்றாக நடிக்க கூடிய மற்றும் நடிகைக்கான முக அழகு கொண்ட இவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை. மேலும் இவர் நடித்தாலே அந்த படம் தோல்வி தான் என்பதை போன்ற சர்ச்சையும் உருவாகிவிட்டது.

இவருடைய நடிப்பில் சைக்கோ திரைப்படம் நல்ல ஹிட் அடித்து இருந்தாலும், அதிதி ராவுக்கு எந்தப் பெயரும் கிடைக்கவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவே வேண்டாம் என இவர் முடிவெடுத்து ஒதுங்கி விட்டார். தமிழில் இப்படி படுதோல்விகளை சந்தித்த இவர் இந்தி சினிமாவில் தற்போது கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்.

Also Read:திரிஷா போல் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் நடிகை.. புதுப்பட அப்டேட்டால் பதறும் ஹீரோயின்கள்

சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இந்தி வெர்ஷனில் குந்தவையாக நடித்த த்ரிஷாவுக்கு டப்பிங் பேசியது அதிதி ராவ் தான். மேலும் இவர் பின்னணி பாடகியும் கூட. இந்தி மட்டும் இல்லாது தெலுங்கு சினிமா படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை அதிதி ராவ் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஹிட் நடிகராக இருக்கும் சித்தார்த்துடன் காதலில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதை இவர்கள் இருவரது தரப்பிலும் இதுவரை மறுக்கவில்லை. அதிதி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:ஹீரோக்களுக்கு இணையாக சிக்ஸ் பேக்ஸ் வைத்த ஆடுகளம் நடிகை.. வைரலாகும் டாப்ஸி புகைப்படம்

Trending News