செர்பியா,டெல்லி, ராஜஸ்தான், சென்னை என தக்லைப் படத்தின் சூட்டிங் படுவேகமாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சென்னையில் ஃபர்ஸ்ட் ஷெடியூலை முடித்துவிட்டு இப்பொழுது மீண்டும் இங்கேயே வந்திருக்கிறார்கள். சென்னையில் இந்த படத்திற்காக தற்போது தனி செட்டு போட்டு சூட்டிங் எடுத்து வருகிறார்கள்
தக்லைப் படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் வெளியேறியதால் அவர்களுக்கு பதில் யாரையும் கமிட் செய்யவில்லை மணிரத்தினம். மாறாக இந்த படத்தின் மொத்த ஸ்கிரிப்ட்டையும் மாற்றிவிட்டார். இப்பொழுது கமல், சிம்பு தான் படத்தில் தூண்கள். இவர்கள் இருவரை தவிர யாரும் நடிக்கவில்லை.
செல்லப் பிள்ளை சிம்புக்காக அடித்த அந்தர்பல்டி
மொத்த ஸ்கிரிப்டும் இவர்களை சுற்றி நடக்கும் படி அமைத்து விட்டார் மணிரத்தினம். ஜெயம் ரவி இந்த படத்தில் இருந்து விலகியதற்கு முக்கியமான காரணமாக ஒன்றைக் கூறுகிறார்கள். ஜெயம் ரவிக்குகும், மணிரத்தினத்திற்கும் இடையே பெரிய மனஸ்தாபம் உருவாகியுள்ளது. மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்தே இவர்களுக்குள் மனக்கசப்பு தான் .
ஜெயம் ரவி ஒரு படத்திற்கு சம்பளம் 15 முதல் 20 கோடி வரை வாங்குகிறார். ஆனால் மணிரத்தினமும் பொன்னியின் செல்வன் படத்திற்கு ரவியின் கால் சீட் கம்மி, அதனால் வெறும் 4 கோடிகள் மட்டுமே சம்பளமாக கொடுத்திருக்கிறார. இதனால் பெரும் அதிருப்தியில் இருந்திருக்கிறார் ஜெயம் ரவி.
இப்பொழுது தக்கலை படத்திற்கும் இதே நிலைமைதான் அதே சம்பளம் கொடுப்பதாகத்தான் மணிரத்தினம் பேசியிருக்கிறார். இதனால் தான் ஜெயம் ரவி இந்த படத்தில் இருந்து வெளியேறி உள்ளார். சிம்புவுக்கும், ஜெயம் ரவிக்கும் ஒத்துப் போகாது அதனால்தான் வெளியேறிவிட்டார் என்று புரளியை கிளப்பி விட்டனர்.