திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

கமலிடம் ஒரு கதை சொல்லப்போன மணிரத்னம்.. அதே மாதிரி 3 கதை சொல்லி திருப்பி அனுப்பிய ஆண்டவர்

கமலஹாசனிடம் எப்போதுமே ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அளவுக்கதிகமாக ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்து அதற்கு ஏகப்பட்ட விடையையும் கண்டுபிடித்து வைத்திருப்பார். இதனாலேயே கமல்ஹாசன் ரசிகர்களால் ஆண்டவர் என அன்போடு அழைக்கப்படுகிறார்.

பெரும்பாலும் கமல்ஹாசன் படங்களை இயக்கும் இயக்குனர்களின் சொந்த கதையாக இருக்கிறது. ஏற்கனவே கதை, திரைக்கதை, வசனம் அனைத்தையும் கமல்ஹாசனே எழுதி வைத்திருப்பார்.

அந்த படத்தை அவர் சொன்னபடி இயக்கினால் போதும். அதுமட்டுமில்லாமல் தன்னை சந்தித்து கதை ஒருவரும் பலருக்கும் தன்னால் அந்த கதையில் என்னென்ன மாற்றங்கள் செய்ய முடியும் என்பதையும் சொல்லி விடுவார்.

ஆரம்பத்தில் அந்த இயக்குனரின் படமாக சென்று அந்த படம் முடியும்போது அது கமலஹாசன் படம் ஆக மாறிவிடும். இது தான் கால காலமாக நடந்து வருகிறது. இப்போதுகூட லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் கமலஹாசன் ஏகப்பட்ட மாற்றங்களைச் சொல்லி வருவதாக செய்திகள் வருகின்றன.

இதே மாதிரி பிரச்சனையை மணிரத்தினமும் ஒருமுறை சந்தித்துள்ளார். கமலஹாசனை சந்தித்து பல்லவி அனுபல்லவி என்ற கதையை 1983 ஆம் ஆண்டு சொல்ல சென்றாராம். ஆனால் அதே போன்று மூன்று வித்தியாசமான கதைகளை கூறினாராம் கமலஹாசன்.

அதில் அதிர்ச்சியான மணிரத்தினம் அதன் பிறகு அந்த படத்தில் கமலஹாசனுக்கு பதிலாக அணில் கபூர் என்பவரை வைத்து அந்த படத்தை எடுத்து வெளியிட்டார். அதன் பிறகு நான்கு வருடம் கழித்து நாயகன் என்ற கதையை சொல்லி கமலஹாசனை இம்பிரஸ் செய்தாராம் மணிரத்னம்.

kamal-maniratnam-cinemapettai-01
kamal-maniratnam-cinemapettai-01

Trending News