திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

மிஸ்கின் கேட்ட கேள்வியால் கடுப்பான மணிரத்தினம்.. எந்த காலத்திலும் இவரின் மூஞ்சில முழிக்கவே மாட்டேன்னு போயிட்டாராம்

Director Myskin: இயக்குனர் மிஸ்கினுக்கு மனசுல என்னமோ பெரிய அரிச்சந்திரன்னு நினைப்பு. மனசுல பட்டதெல்லாம் மறைக்காம பேசி வருவதாக நினைத்து எல்லோரையும் காயப்படுத்தி வருகிறார். அதில் யார் கஷ்டப்பட்டாலும் அவமானப்பட்டாலும் நமக்கு என்ன, என்னுடைய கேரக்டர் இதுதான் என்று பலரையும் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அந்த வகையில் மணிரத்னமும் இவரிடம் மாட்டியிருக்கிறார்.

அதாவது பொது நிகழ்ச்சி ஒன்றில் பார்ட்டி நடந்திருக்கிறது. அதில் பெரிய பெரிய இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் மிஸ்கினும் பங்கேற்று இருக்கிறார். தான் சும்மா இருந்தாலும் தன்னுடைய வாய் சும்மா இருக்காது என்று சொல்வார்கள். அதுதான் மிஸ்கின் விஷயத்திலும் நடந்திருக்கிறது.

Also read: மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள்.. அட இது என்ன புது பஞ்சாயத்தா இருக்கு

அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் சங்கர் முக்கியமான விஷயமாக ரொம்ப நேரம் பேசி இருக்கிறார்கள். அப்போது மிஸ்கின் இடையில் புகுந்து வழக்கம்போல் இவருடைய பேச்சை தொடங்கி இருக்கிறார். போதையில் என்ன பேசுவது என்று தெரியாமல் மணிரத்தினத்தை பார்த்து தேவையில்லாத கேள்வியை கேட்டிருக்கிறார்.

அத்துடன் மணிரத்தினத்திடம் கடைசியில் எப்போது நல்ல படங்களை எடுக்கப் போகிறாய் என்று கேட்டு அசிங்கப்படுத்தி விட்டிருக்கிறார். இந்த மாதிரி பேச்சை கேட்ட சங்கர் மற்றும் மணிரத்தினம் அந்த இடத்தை விட்டு சொல்லிக் கொள்ளாமலேயே கிளம்பி போய்விட்டார்கள்.

Also read: மணிரத்தினத்திடம் எடுபடாமல் போன சிம்புவின் சில்மிஷங்கள்.. பாம்பு புற்றிலே மகுடி வாசிச்சாலும் வேலைக்காகல

மேலும் இவருடைய சகவாசத்தை இதோடு முடித்துக் கொள்ளலாம். எந்த காலத்திலும் இவருடைய மூஞ்சில கூட முழிக்க கூடாது என்று முடிவெடுத்து இருக்கிறாராம். அப்போதையிலிருந்து மணிரத்தினம் மிஸ்கின் இடம் எவ்வித பேச்சுக்களையும் கொடுக்காமல் எஸ்கேப் ஆகி விடுவாராம். எதற்காக இவரிடம் தேவையில்லாமல் பேசி தன்னுடைய இமேஜை கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று மணிரத்தினம் விலகிப் போய் விடுவார்.

ஆனால் மிஷினுக்கு என்னமோ மற்றவரை அசிங்கப்படுத்துவது ஒரு பெருமையான விஷயமாக நினைத்து தொடர்ந்து இதே மாதிரி பல பிரபலங்களை காயப்படுத்தி வருகிறார். இது என்றைக்கு இவரிடம் இருந்து போகுதோ அப்பதான் இவருடைய கேரியர் இன்னும் உச்சத்தில் இருக்கும் என்று பலரும் இவரை பற்றி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Also read: நாயகன் 2வில் நடிக்க ஆசை.. மேடையில் மணிரத்தினத்திடம் பகிரங்கமாக வாய்ப்பு கேட்ட நடிகர்

Trending News