இந்திய சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய நடிகை என்றால் அது மனிஷா கொய்ராலா தான். இந்தியாவில் உள்ள அனைத்து மொழி படங்களிலும் நடித்த பெருமை அவருக்கு உண்டு.
1970 ஆம் ஆண்டு பிறந்த மனிஷா கொய்ராலா, 1993 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பாம்பே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி வைத்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டார். கமலுடன் இந்தியன், ரஜினியுடன் பாபா போன்ற படங்களின் மூலம் உச்சத்தை தொட்டார்.
இவரும் 2010 ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்துகொண்டு இரண்டே வருடத்தில் விவாகரத்து பெற்ற நடிகை தான். பிறகு புற்றுநோய் ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்.
பின்னர் எப்படியோ போராடி அதிலிருந்து மீண்டு வந்து தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்து வருகிறார்.
![manisha-koirala-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/05/manisha-koirala-cinemapettai.jpg)
இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளதாம். இளம் வயதில் கூட இப்படி நடித்ததில்லை என்று கேட்ட மனிஷா கொய்ராலாவிடம் இயக்குனர், அதனால்தான் இப்போது காட்ட சொல்கிறேன் என்று கூறியதால் சந்தோஷம் அடைந்துவிட்டாராம்.
![manisha-koirala-cinemapettai-01](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/05/manisha-koirala-cinemapettai-01.jpg)