மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், கெளதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து இப்படை வெல்லும், சத்ரியன், தேவராட்டம், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தற்போது மஞ்சிமா மோகன் துக்ளக் தர்பார், எப்ஐஆர் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் சர்வதேச சாக்லேட் தினத்தை, தான் செய்த சாக்லேட் கேக்குடன் மஞ்சிமாமோகன் கொண்டாடியுள்ளார்.
தான் செய்த சாக்லேட்டை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மஞ்சிமாமோகன், “இந்த சுவையான சாக்லேட்டை நான் பார்ப்பது போன்று என்னை பார்க்கும் நபரை தான் நான் விரும்புகிறேன். இனிய சர்வதேச சாக்லேட் தினம்” என குறிப்பிட்டுள்ளார்.
அப்புறம் என்ன பாஸ் அதான் சொல்லிட்டாங்கல உடனே ஒரு ரொமான்டிக் லுக்கு விட்டு அவங்க மனசுல இடம் புடுச்சுடுங்க.