புதன்கிழமை, ஜனவரி 22, 2025

விவரமாக இருக்கும் மஞ்சிமா மோகன்.. பண பெட்டியை திறக்கும் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். அதன்பிறகு இவர் பெரிய அளவில் படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு சில படங்களில் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அதனை சரியாக பயன்படுத்தி தற்போது வரை சில படங்களில் நடித்து வருகிறார்.

விஷ்ணு விஷால் உடன் இணைந்து மஞ்சிமா மோகன் எஃப் ஐ ஆர் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தற்போது படக்குழுவினர் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகள் கிடைக்காததால் தற்போது வரை படத்தை வெளியிடாமல் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மஞ்சிமா மோகன் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருவதால் சொகுசு விடுதியில் தங்கினால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் செலவு ஏற்படும் பட வாய்ப்புகள் குறையும் என்பதால் தற்போது சென்னையிலேயே ஒரு வீடு வாங்கியுள்ளார்.

manjima mohan
manjima mohan

 

ஆனால் அந்த வீட்டிற்கு வாடகையை தயாரிப்பாளர்கள்தான் கொடுத்து வருகின்றனர். இதனைக் கேட்ட ஒரு சிலர் இதற்கு பருத்தி மூட்டை குடோனில் இருந்திருக்கலாம் எனக் கூறி வருகின்றனர். அதாவது இரண்டும் ஒன்றுதான் சொகுசு விடுதியில் இருந்தாலும் தயாரிப்பாளர் தான் பணத்தை கொடுக்க போகிறார். சொந்த வீடு வாங்கினாலும் வீட்டின் செலவிற்கு தயாரிப்பாளர்தான் பணத்தை செலவிடுகிறார். 2ம் ஒன்னுதான் என கூறி வருகின்றனர்.

Trending News