சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

படையப்பா 2-ல் நீலாம்பரியாகும் மஞ்சு நடிகை? KS ரவிக்குமாருக்கு விஜய் சேதுபதி கொடுத்த ஐடியா!

சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் நடிப்பில் விடுதலை 2 படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. சமீப காலமாக மஞ்சு வாரியர் தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டெட் ஹீரோயினாக இருக்கிறார்.

வேட்டையன் படத்தில் சூப்பர்ஸ்டாருடன் உள்ள இவரது காம்பினேஷன் மிக அழகாக இருந்தது. மேலும் தற்போது அவர் விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

அதில் வரும் தினம் தினமும் பாடல் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்துள்ளது. விடுதலை 2 படம் வரும் 20-ஆம் தேதி வெளியாகும் நிலையில், படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படி இருக்க சமீபத்தில் ஒரு நேர்காணலில் கே.எஸ்.ரவிக்குமார் மஞ்சு வாரியரிடம் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். “நீங்கள் எப்படி? தொடர்ந்து ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பீர்களா?

அல்லது நல்ல Charecter-ஆக இருந்தாலும் நடிப்பீர்களா?” என்று கேட்டுள்ளார். அதற்க்கு, “அப்படி எல்லாம் இல்லை சார்.. powerful Charecteril நடிக்க வேண்டும் என்று தான் என்னுடைய ஆசையும்..” என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து படையப்பா 2 ல நடிப்பீர்களா என்று கே.எஸ்.ரவிக்குமார் கேட்க, நீலாம்பரி Charecter என்றால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

அப்போது கே.எஸ் ரவிக்குமார் பேசாமல் நீலாம்பரியை கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.. அப்போது விஜய் சேதுபதி, “அதான் அடுத்த ஜென்மத்துல சும்மா விடமாட்டேன்-ன்னு சொல்லிருக்காங்களே..”

என்று hint கொடுக்க ‘அதுவும் சரி தான்.. ஒரு Script ரெடி பண்ணிருவோம்..’ என்று கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News