திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மஞ்சு வாரியாருக்கு இவ்வளவு பெரிய மகளா.? அடுத்த கதாநாயகி ரெடி, வைரல் புகைப்படம்

எப்போதுமே நாயகி தேர்வில் அதிகம் மெனக்கடும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன். கடைசியாக தனுஷ் நடிப்பில் அசுரன் படத்தை இயக்கியவர் இப்போது அடுத்தடுத்த புராஜக்ட்டுகளில் படு பிஸியாக உள்ளார்.

அசுரன் படத்திற்காக மஞ்சு வாரியரை தூக்கி வந்தவருக்கு எங்கிருந்து தான் சிக்குகிறார்களோ இப்படி என யோசிக்க வைத்தது உண்மை தான். தமிழுக்கு வேண்டுமானால் மஞ்சு வாரியர் அறியாத முகமாய் இருக்கலாம் கேரள திரைகளில் 90களிலேயே அறிந்த முகம் தான்.

கேரளாவின் லேடி சூப்பர் ஸ்டாரும் கூட ஆரம்பத்தில் சில விளம்பர படங்களில் நடித்து வந்த மஞ்சு வாரியருக்கு 1995-ல் வெளியான சாக்ஷியம் தான் முதல் திரை அறிமுகம் தேடித்தந்தது. தொடர்ச்சியாக பல்வேறு வெற்றிபபடங்களை தேடி தந்தவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது அசுரன் தான்.

Meenakshi Dileep
Meenakshi Dileep

1998 ஆம் ஆண்டு நடிகர் திலீப்பை திருமணம் செய்து சில ஆண்டுகள் வாழ்ந்திருந்த மஞ்சுவுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்திருந்தது. இந்நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர் மஞ்சு திலீப் தம்பதி.

இப்போது அசுரனுக்கு பிறகோ பல்வேறு தமிழ் பட வாய்ப்புகளும் மீண்டும் மலையாள பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இப்போது இவரது மகள் மீனாட்சி சமூக வலைகளில் அப்லோட் செய்த புகைப்படம் தான் கேரளா தமிழ்நாடு இளைஞர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

அத்தனை பேரழகாக இருக்கும் மீனாட்சியை ஜூனியர் மஞ்சு ப்யூட்டி குயின் என கமாண்டடித்து ரசித்து வருகின்றனர் நெட்டிசன்கள் பலரும்.

Trending News