வியாழக்கிழமை, டிசம்பர் 5, 2024

விடுதலை 2வில் மஞ்சு வாரியர் சம்பளம்.? நடிப்பு அரக்கிக்கு வாரி வழங்கிய வெற்றிமாறன்

Viduthalai 2 : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடுதலை 2 படம் மிக விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது. மேலும் இப்படத்தில் இளையராஜா இசை அமைத்திருந்தார்.

இந்த சூழலில் விடுதலை படத்தின் முதல் பாகத்தில் சூரியின் கேரக்டரை வைத்து தான் படம் நகர்ந்தது. ஆனால் இப்போது இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாபாத்திரத்தை கொண்டு படம் நகர இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற தினம் தினம் உன் நெனப்பு பாடல் வெளியாகி இருந்தது.

இதில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் இளமையான தோற்றத்தில் இருந்தனர். இந்நிலையில் மஞ்சு வாரியர் விடுதலை 2 படத்திற்கு வாங்கிய சம்பளம் வெளியாகி இருக்கிறது. வெற்றிமாறனின் அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார் மஞ்சுவாரியர்.

விடுதலை 2வில் மஞ்சு வாரியர் சம்பளம்

தனுசுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்த நிலையில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதன் பிறகு கண்மணியாக துணிவு படத்தில் பட்டையை கிளப்பி இருந்தார். இதைத் தொடர்ந்து ரஜினிக்கு ஜோடியாக வேட்டையன் படத்தில் நடித்திருந்தார்.

இப்போது மீண்டும் வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை 2 படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஒரு புரட்சிகரமான கதாபாத்திரத்தில் தான் அவர் நடித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில் கடைசியாக தமிழில் மஞ்சு வாரியர் நடித்த வேட்டையன் படத்திற்கு 2 கோடி சம்பளம் வாங்கியிருந்தார்.

இப்போது கூடுதலாக ஒரே படத்தில் ஒரு கோடி ரூபாய் உயர்ந்து விடுதலை 2 படத்திற்கு கிட்டத்தட்ட 3 கோடி சம்பளம் பெற்று இருக்கிறார். நடிப்பு அரக்கியாக வலம் வரும் மஞ்சு வாரியருக்கு சம்பளத்தை வாரி வழங்கி இருக்கிறார் வெற்றிமாறன். மேலும் டிசம்பர் 20ஆம் தேதி தியேட்டரில் விடுதலை 2 வெளியாக இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News