திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அந்த படம் மட்டும் ஓடலன்னா என்னுடைய கேரியர் எப்பவோ காலி.. சீக்ரெட் உடைக்கும் மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர் பிறந்தது நாகர்கோயிலாக இருந்தாலும் வளர்ந்தது வாழ்ந்தது எல்லாமே கேரளாவில் தான். 1995ஆம் ஆண்டு மலையாளத்தில் அறிமுகமான மஞ்சு வாரியர் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் மளமளவென நடித்துத் தள்ளினார்.

குறிப்பிட்ட மூன்று வருடங்களில் மட்டும் மஞ்சு வாரியரின் கேரியர் உச்சத்தில் இருந்தது. வருடத்திற்கு ஏழு, எட்டு படங்கள் மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியாகி கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போதைய சூப்பர் ஸ்டார் மலையாள நடிகர்கள் அனைவருமே மஞ்சு வாரியர் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆர்வமாக இருந்தனர்.

கேரியர் நன்றாக சென்று கொண்டிருக்கும் போதே 1998 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். பல வருடங்கள் நன்றாக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் திடீரென விவாகரத்து என்ற பிரச்சனை நடந்து சொந்த வாழ்க்கை கோவிந்தா ஆனது.

இருந்தாலும் சினிமாவில் மஞ்சு வாரியர் சோடை போகவில்லை. திலீப் திருமணத்திற்குப் பிறகு பல வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் குடும்பம் குட்டி என்று இருந்தவரை ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்கு மீண்டும் அழைத்து வந்தனர்.

எந்த ஒரு நடிகைக்மே ரீ என்ட்ரி அவ்வளவு சிறப்பாக இருந்ததில்லை. மீண்டும் மஞ்சு வாரியரை கேரள ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தனர். அதன் விளைவு 42 வயதிலும் நிற்க நேரமில்லாமல் ஏகப்பட்ட படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மஞ்சு வாரியர் கொடுத்த பேட்டி ஒன்றில், ஹவ் ஓல்ட் ஆர் யூ? படம் மட்டும் வெற்றி பெறவில்லை என்றால் என்னுடைய சினிமா கேரியரும் சரி, சொந்த வாழ்க்கையும் சரி ஒன்றும் இல்லாமல் போயிருக்கும் எனக் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

manju-wrrier-cinemapettai
manju-warrier-cinemapettai

Trending News