வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

27 வயதாகியும் இதுவரைக்கும் ஓட்டு போடாத சிம்பு பட நடிகை.. நீங்கள் எல்லாம் இப்படி பண்ணலாமா?

சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்பு பட நடிகை 27 வயதாகியும் இதுவரைக்கும் ஒரு ஓட்டு கூட போடவில்லை என தெரிவித்தது மட்டுமில்லாமல் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு இவர் நடித்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக அறிமுகமானார்.

சமீபத்தில் களத்தில் சந்திப்போம் பட புரமோஷனுக்காக பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது நிருபர் வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு போடுவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மஞ்சுமா மோகனிடம் இதுவரைக்கும் நீங்கள் எத்தனை ஓட்டு போட்டு உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு மஞ்சிமா மோகன் இதுவரைக்கும் நான் எந்த ஒரு தேர்தலிலும் ஓட்டு போடவில்லை என்றும் அதற்கான சூழ்நிலை அமையவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தேர்தல் நடைபெறும் நேரத்தில் வெளியூர் ஏதாவது படப்பிடிப்பு நடந்து வரும்.

manjima mohan
manjima mohan

அதனால் என்னால் தேர்தல் நடைபெறும் இடத்திற்கு போக முடியாது என்றும் மேலும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து படங்கள் எடுப்பதால் தன்னால் நின்று விடக் கூடாது என்பதற்காகவும் அதனாலதான் ஓட்டு போட முடியாமல் போனதாக விளக்கம் அளித்தார்.

அதுமட்டுமில்லாமல் கண்டிப்பாக இனிவரும் தேர்தல்களில் ஓட்டு போடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Trending News