சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கொஞ்ச நாளைக்கு வாலை சுருட்டிட்டு உட்கார வேண்டியது தான்.. மஞ்சும்மள் பாய்-க்கு வந்த புது சோதனை

ஒரு படம் ஓடினால் எதோ சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு சில இளம் நடிகர்கள் நடந்துகொள்வது சினிமாவில் வாடிக்கையான விஷயம் தான். ஆனால் ஒரு நடிகர் கொஞ்சம் ஓவர் அளப்பறையை கொடுத்திருக்கிறார். தற்போது அந்த நடிகருக்கு தக்க பாடமும் புகட்ட பட்டுள்ளது.

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படம் அதிரிபுதிரு ஹிட் ஆனது. படம் 100 கோடிக்கு மேல் வசூல் மழை பொழிந்தது. மலையாளம் மட்டுமல்லாமல், தமிழ் ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்தது. இதில் நடித்த நடிகர் ஸ்ரீநாத் பாசி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சர்ச்சைக்கு மேல் சர்ச்சை

இவர் ஏற்கனவே கேரளாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போதை விருந்தில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கினார். பின்னர் இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் இன்னொரு வழக்கில் சிக்கினார். இவர் காரில் சென்ற போது அவருடைய கார் மோதி பைக்கில் சென்ற வாகன ஓட்டி படுகாயமடைந்தார்.

நல்ல வேலை இறந்து போகவில்லை. இல்லை என்றால் கொலை கேஸ் ஆகி இருக்கும். சிறு புகழ் கிடைத்தவுடன் அடக்கமாக நடந்துகொள்பவர்கள் மட்டுமே வானுயர்த்திற்கு செல்வார்கள். இல்லை என்றால், அவருக்கு தக்க பாடத்தை கர்மா புகட்டும் என்பதற்கு ஏற்ப தற்போது ஒரு விஷயம் நடந்துள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர், காவல் நிலையத்தில் புகார் அளிக்க, இந்த நடிகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, ஒரு மாத காலத்திற்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள், ஆமா எவன் மேலையும் வண்டியை இடிக்காம சிவனே ன்னு இருக்குற TTF-க்கு மொத்தமா இங்க ரத்து பண்ணீங்க.. பக்கத்து ஸ்டேட் ல பாருங்க.. வண்டிய ஏத்திட்டு தவுளத்தா ஒருத்தன் போயிருக்கான். அவருக்கு ஒரு மாத கால ரத்து செஞ்சு யாருக்கு என்ன பலன்.. இதெல்லாம் ஒரு தண்டனை என்று உமிழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

Trending News