Manjummel Boys: கடந்த மாதம் வெளிவந்த மலையாள படமான மஞ்சுமல் பாய்ஸ் தமிழ்நாட்டில் பேராதரவை பெற்றுள்ளது. அதிலும் வெளியான அடுத்தடுத்த நாட்களிலேயே அதிக ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டு ஆச்சார்யப்படுத்தியது.
அதனாலேயே வசூலும் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பெருகி உள்ளது. அதன்படி தற்போது வரை இப்படத்தின் மொத்த வசூல் 146 கோடியாக இருக்கிறது. தற்போது வரை திரையரங்குகளில் கொண்டாடப்பட்டு வரும் இப்படத்தின் ஓடிடி ரிலீசை தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.
அதேபோல் வசூலில் பல சாதனைகள் படைத்த இப்படத்தை வாங்குவதற்கு ஓடிடி நிறுவனங்களும் போட்டி போட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் மிகப்பெரிய ட்விஸ்ட் ஆக இப்படம் இப்போது விலை போகாத நிலையில் இருக்கிறது. எப்போதுமே ஒரு படம் படப்பிடிப்பின் போது வியாபாரம் ஆகிவிடும்.
சீண்டப்படாத மஞ்சுமல் பாய்ஸ்
அதுவும் இல்லை என்றால் படத்தின் வரவேற்பை பொறுத்து பிசினஸ் ஆகும். அப்படி இருக்கும் நிலையில் மஞ்சுமல் பாய்ஸ் சீண்டப்படாமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது இப்படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்து விட்டதால் குழுவினருக்கு கொஞ்சம் பேராசை வந்து விட்டதாம்.
அதனாலேயே 20 கோடிக்கு மேல் படத்தை ஓடிடிக்கு விற்று லாபம் பார்க்க நினைத்திருக்கின்றனர். ஆனால் இத்தனை கோடியை கொடுத்து வாங்குவதற்கு எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை. இருந்தாலும் பட குழுவினர் முக்கிய நிறுவனத்துடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
எப்படியும் அவர்களுக்கு கை மேல் பலன் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்துடன் ரிலீசான பிரேமலு, பிரமயுகம் ஆகிய படங்கள் தற்போது நல்ல விலைக்கு விற்பனையாகியுள்ளது. ஆனால் பேராசைப்பட்டதால் மஞ்சுமல் பாய்ஸ் விலை போகாத நிலையில் தடுமாறி வருகிறது.