வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

நயன்தாரா பட கதையை காப்பி அடித்த மஞ்சுமல் பாய்ஸ்.. வசூலில் மிரட்டும் திரில்லர்

Manjummel Boys who shot the story of Nayanthara movie: தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற புகழை உடைய உலக நாயகன் கமலஹாசன் தனது தோல்வியின் மூலமாகவே காலாகாலத்திற்கும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் இதற்கு உதாரணமே 1991 ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் வெளிவந்த குணா திரைப்படம். 

“மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல” என்று 33 ஆம் ஆண்டுகளை கடந்த பின்னும் அந்த குகையில் தழும்பி வழிந்த கமலின் காதல் இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்கா வண்ணம் நிலைபெற்றுள்ளது. அந்த குகை இன்றும் கொடைக்கானலில் குணா குகை என்று பெயருடனேயே  உள்ளது. 

இந்த குணா குகையை கதைக்களமாக வைத்து உருவான மலையாளத்தின் மஞ்சுமல் பாய்ஸ் விமர்சன ரீதியாக பழைய கதை தான் என பெயர் எடுத்தாலும்  திரைக்கதையின் தனித்தன்மை காரணமாக தமிழ்நாடு, கேரளா என வெளிவந்த அனைத்து இடங்களிலும் வசூல் ரீதியாக சக்கை போடு போட்டு வருகிறது. 

Also read: சமீபத்தில் வசூலை வாரி இறைக்கும் 3 மலையாள படங்கள்.. தூண்டிலை போட்டு சுறா பிடித்த மம்முட்டி படம்

மலையாளத்தில்  மஞ்சுமல் என்ற இடத்தில் உள்ள நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர் வந்த இடத்தில் குணா குகையில் ஆர்வக்கோளாறான நண்பன் ஒருவன் மாட்டி விட மற்ற நண்பர்கள் பல்வேறு சோதனைகளுக்கு பின்  நண்பனை காப்பாற்றுவதே கதை. 

கொடைக்கானல் மற்றும் பழனி அதனை சுற்றிய இயற்கை சூழலை அழகாக படம் பிடித்து காட்டியதோடு துயரமான நேரத்திலும் நண்பர்களுக்குள் இயற்கையாக அமைந்த நகைச்சுவையை வெளிக்காட்டி கண்ணீருடன் கடைசி வரை விறுவிறுப்பு தன்மை குறையாது அமர வைத்தார் இயக்குனர். 

இந்த மாதிரி ஸ்டோரி என்பது தமிழ் சினிமாவில் புதிது அல்ல. ஹாலிவுட் மற்றும் தமிழ் படங்களில் பார்த்த கதையே ஆகும் இதே பாணியில் கதை அம்சம் கொண்ட திரைப்படம் தான் நயன்தாராவின் அறம்.“மக்கள்தான் அரசாங்கம்” என அரசுக்கு எதிராக செயல்பட்டு  அரசியல்வாதிகளின் முகத்தை தோலுரித்துக் காட்டி ஆழ்துளை கிணறில் சிக்கி இருந்த சிறுமியை  மீட்டெடுத்திருந்தனர் நயன்தாராவின் அறம் குழுவினர். 

அதே கதை பாணியில் அமைந்த இந்த மஞ்சுமல் பாய்ஸ், திரைக்கதையின் ஸ்பெஷாலிட்டி காரணமாக  பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க செய்துள்ளது. 

Also read: இப்படியே போனா பொழப்பு ஆட்டம் கண்டுடும்.. சாகசத்துக்கு தயாராகும் நயன்தாரா

Trending News