ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நான் காதலித்தது உண்மை, ஆனா குழந்தை எல்லாம் ஓவரா இல்லையா.! அஜித் பட நடிகையின் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் புதிதாக அறிமுகமாகி கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அறிமுகமாகும் அனைவரும் நிலையாக நிலைத்து நிற்பதில்லை. ஒன்று அல்லது இரண்டு படங்களுக்குப் பிறகு எங்கிருக்கிறார்கள் என்பது கூட தெரியாத அளவிற்கு சென்றுவிடுவார்கள். இவர்களில் சிலர் மட்டுமே தங்களது திறமையால் தற்போது வரை நிலைத்து நிற்கிறார்கள். அந்த வகையில் மிகவும் முக்கியமான நடிகை என்றால் அது நடிகை அஞ்சலி தான்.

பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. அறிமுகமான முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதுமட்டுமின்றி இவரது நடிப்பும் எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்கள் இவரை விரும்ப தொடங்கினார்கள்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஞ்சலிக்கு அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. அந்த வரிசையில் இவருக்கு மிக முக்கியமான மற்றும் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அங்காடித்தெரு தான். இப்படம் மூலமாகவே அஞ்சலி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார். அந்த அளவிற்கு இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

தொடர்ந்து ரெட்டைசுழி, எங்கேயும் எப்போதும், தூங்காநகரம், மங்காத்தா, கலகலப்பு ஆகிய படங்களில் அஞ்சலி நடித்தார். பின்னர் இவரது குடும்ப பிரச்சனை காரணமாக சில நாட்கள் படங்களில் இருந்து விலகி இருந்தார். தனது பிரச்சனைகளை முற்றிலும் முடித்த பின்னரே மீண்டும் சினிமாவிற்கு ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் அஞ்சலி தமிழில் யோகி பாபு உடன் சேர்ந்து பூச்சாண்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அஞ்சலி, “நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கிறேன். சில படங்கள் வெற்றி பெறுகிறது. சில படங்கள் தோல்வி அடைந்து விடுகிறது. இது மிகவும் இயல்பான விஷயம். தோல்வியை நினைத்து நான் வருந்துவதில்லை.

anjali-cover
anjali-cover

நான் காதலில் சிக்கி இருந்தேன். எனக்கு குழந்தைகள் இருந்தது என்ற செய்திகள் பரவி வந்ததை கூட நான் பார்த்தேன். ஆமாம் நான் ஒருவரை காதலித்தேன். ஆனால் ஒரு சில காரணங்களால் அது நிறைவேறவில்லை. தற்போது எனது அம்மாவுடன் நான் ஹைதராபாத்தில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Trending News