வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சிம்பு பட வாய்ப்பில் நடிக்கும் பிரபல நடிகர்.. 10வது பட போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு

கடந்தாண்டு இறுதியில் வெங்கட் பிரபு மற்றும் சிம்பு கூட்டணியில் வெளியான படம் தான் மாநாடு. இந்த படம் வெளியாகி தற்போது வரை 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. யாருமே எதிர்பாராத வகையில் மாநாடு படம் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளதால் தற்போது வெங்கட் பிரபு இந்திய அளவில் கவனிக்கப்பட கூடிய இயக்குனராக பிரபலமாகி உள்ளார்.

முன்னதாக அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா படம் மூலம் வெங்கட் பிரபு ஓரளவிற்கு பிரபலமாகி இருந்தாலும், மாநாடு படம் தான் அவருக்கு பெரிய அளவில் ரீச் கொடுத்துள்ளது. இதனால் தற்போது அவரின் மார்க்கெட் கோலிவுட்டில் உச்சம் தொட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவரது அடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மன்மத லீலை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு பாதியில் மீசைதாடி இல்லாமலும், ஒரு பாதியில் மீசை தாடியுடனும் அட்டகாசமான லுக்கில் நடிகர் அசோக் செல்வன் போஸ்டரில் போஸ் கொடுத்துள்ளார்.

வெங்கட் பிரபுவின் 10வது படமாக உருவாகியுள்ள மன்மத லீலை படத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் மற்றும் ரியா சுமன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபுவின் சகோதரரும் நடிகருமான பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.

மேலும் மன்மத லீலை படம் அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே சென்றதால் அந்த இடைப்பட்ட நேரத்தில் வெங்கட் பிரபு மன்மத லீலை படத்தின் வேலைகளை தொடங்கி விட்டாராம். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

manmatha-leelai
manmatha-leelai

சிம்புக்கு அடுத்தடுத்து படங்கள் வரிசை கட்டி நிற்பதால் தனக்கு வந்த இந்த வாய்ப்பை இளம் நடிகர் யாருக்காவது கொடுத்து விடுங்கள் என்று கூறி விட்டாராம். இதனால் வெங்கட் பிரபு அசோக் செல்வனை வைத்து இந்த படத்தை எடுத்து வருகிறாராம்.

Trending News